ரூல்ஸ் மாறுகிறது ரயில் டிக்கெட் புக்கிங்கில்.. ஆன்லைனில் ஆதார் இணைப்பு கட்டாயம்.. ஜனவரி 12 முதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அறிவிப்புகளையும் சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.. மேலும் பயணிகளை கவரும் வகையிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதேசமயம் எளிதான பயணத்துக்கு உதவும்படியான விதிமுறைகளையும் வகுத்து வருகிறது. அந்த வகையில், புதிய நடைமுறை ஒன்று வெளியாகி உள்ளது. இது ரயில் பயணிகளின் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் தற்போது சுமார் 85 சதவீத பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்கின்றனர்.

Train tickets Aadhaar IRCTC

இந்த நடைமுறை பயணிகளுக்கு வசதியாக உள்ளது என்றாலும் இந்த முறையில் சிலர் போலி கணக்குகள் உருவாக்கி, அதிக அளவில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து உண்மையான பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக புகார்கள் எழுந்தன. இதனை கட்டுப்படுத்தும் வகையில், ஆதார் எண் இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது.

ரயில்வே புக்கிங் ரூல்ஸ் மாறுகிறது

ஏற்கனவே, காலை 8 மணி முதல் 10 மணி வரை முன்பதிவு செய்ய ஆதார் இணைப்பு கட்டாயமாக அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த விதிமுறை படிப்படியாக மற்ற நேரங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

அதன்படி, நேற்று முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டிக்கெட் எடுக்க ஆதார் இணைப்பு அவசியமாகியுள்ளது. மேலும், ஜனவரி 5ஆம் தேதிக்கு பிறகு, காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தின் இறுதிக் கட்டமாக, ஜனவரி 12ஆம் தேதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், ஐ.ஆர்.சி.டி.சி. கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளது.

ஆதார் எண் இணைப்பு கட்டாயம்

இதுகுறித்து தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனை குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறுகையில், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும் என்றார். அதே நேரத்தில், இந்த விதிமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களுக்கு பொருந்தாது என்றும், இது பொதுமக்களுக்கு நிம்மதியை அளிக்கும் முடிவு என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஆதார் எண் இணைக்கும் போது தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை ரயில்வே நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கை பயணிகளுக்கு நியாயமான முறையில் டிக்கெட் கிடைக்க உதவும் என ரயில்வே தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறை - நன்மை

இந்த நடைமுறையினால், மோசடி மற்றும் போலி முன்பதிவுகள் குறையும். ஆதார் இணைப்பின் காரணமாக, ஒவ்வொரு பயணியரின் அடையாளமும் உறுதிப்படுத்தப்படும் என்பதால், டிக்கெட்டுகள் உண்மையான பயணிகளுக்கு மட்டுமே கிடைக்கும்..

மேலும், புக்கிங் செய்வதில் முறைகேடுகள் குறையும். ஆன்லைனில் மோசடி அல்லது வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று என்பதால் பயணிகள் நம்பிக்கையும் இதனால் அதிகரிக்கக்கூடும் என்றே தெரிகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+