Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமான் வாக்கு இனி ஸ்டாலினுக்கு.. மும்மொழி எதிர்ப்பு- ₹ மாற்ற பின்னணி என்ன? மாதவன் நாரயணன் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் பணத்தை குறிக்கும் ₹ குறியீடு மாற்றத்தின் பின்னணி என்ன? என்பது பற்றி மூத்த பத்திரிகையாளர் மாதவன் நாராயணன் ‛ஒன் இந்தியா' தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் பாஜகவுக்கு திமுக பதிலடி கொடுப்பதோடு வரும் காலத்தில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் ஸ்டாலினுக்கு வரும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2025-26-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நேற்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு முன்பாக நேற்று முன்தினம் பட்ஜெட்டிற்கான இலச்சினையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

tamil nadu mdhavan narayanan tri language policy

அதில் இந்திய ரூபாயை குறிக்கும் ₹ குறியீடு இடம்பெறவில்லை. அதற்கு பதில் ரூபாயை குறிக்கும் தமிழ் எழுத்தான‛ரூ' என்பது இடம்பெற்றிருந்தது. இது விவாதத்தை கிளப்பியது. மும்மொழிக்கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பல்வேறு பாஜக தலைவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதற்கிடையே தான் இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் மாதவன் நாராயணன் ‛ஒன் இந்தியா' தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:

கேள்வி: தமிழ்நாட்டில் இன்று பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பணத்தை குறிக்கும் ₹ குறியீட்டுக்கு பதில் ‛ரூ' என்ற எழுத்து பயன்படுத்தப்பட்டது. இதுபற்றி உங்களின் கருத்து என்ன?

மாதவன் நாராயணன் பதில்: இதனை கவனமாக நாம் பார்க்க வேண்டும். ₹ என்ற சிம்பல் ரோமன் மற்றும் இந்தி கலப்பாக உள்ளது. இதற்கு பதிலாக தமிழ் எழுத்தை பயன்படுத்தி உள்ளனர். இதன்மூலம் மும்மொழி கொள்கையான புதிய கல்வி கொள்கை, மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி பிரிப்பது உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு ₹ என்ற சிம்பலை பயன்படுத்தினார்கள். ஆனால் இப்போது மத்திய அரசுக்கும், தங்களுக்கு இடையேயான பிரச்சனையை ஹைலைட் செய்ய இதனை கையில் எடுத்து எதிர்ப்பை காண்பித்துள்ளனர்.

கேள்வி: தேவனாகரி சிம்பல் ₹யை பயன்படுத்தாமல் நாட்டை திமுக அரசு அவமதித்துள்ளது. இந்தியாவின் பெருமையை நிலைநாட்ட தவறிவிட்டது. தமிழர் கண்டுபிடிப்பை புறம்தள்ளிவிட்டது என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனரே?

மாதவன் நாராயணன்: ₹ சிம்பலை உருவாக்கிய உதயகுமார் தர்மலிங்கம் டிவியில் அளித்த பேட்டியை நான் பார்த்தேன். அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அமைதியாக தனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதில் எந்த கவலையும், கோபமும் இல்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி அவரது தந்தை திமுகவின் எம்எல்ஏவாக இருந்தவர். ₹ சிம்பலை கண்டுபிடித்து உதயகுமார் தர்மலிங்கத்துக்கே பிரச்சனை இல்லாதபோது மற்றவர்களுக்கு ஏன் கவலை வேண்டும்?. இருப்பினும் பாஜக மற்றும் திமுகவுக்கு இடையேயான அரசியல் போட்டி தான் காரணம். திராவிட இயக்கங்கள் குறிப்பாக திமுக இந்தியா என்பது Union Of State என்பதை கூறி வருகிறது. இது அரசியலமைப்பின் முதல் வார்த்தையாகும்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பாரத், காரியகர்த்தா உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். இந்த வார்த்தைகள் என்பது ஆர்எஸ்எஸ்ஸின் வார்த்தையாகும். திமுக அதற்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்த தொடங்கி வருகிறது. இருமொழி கொள்கையை திமுக முன்னெடுத்து வருகிறது. நீட் எதிர்ப்பு உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

கேள்வி: நிர்மலா சீதாராமன் கூறும்போது ₹ சிம்பல் 2010ல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்தபோது கொண்டு வரப்பட்டது. ஆனால் அப்போது எதிர்க்காமல் இப்போது எதிர்ப்பது ஏன்?, சமஸ்கிருதத்துடன் தொடர்பு கொள்ள ரூபாய் சிம்பலை பயன்படுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்? இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

மாதவன் நாராயணன்: 3 விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் திமுக போராட்டம் நடத்தவில்லை. மாறாக இருமொழி கல்வியை போல் இரு சிம்பலை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். 2வது விஷயம் என்னவென்றால் ஜவஹர்லால் நேரு தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க மாட்டோம் என்று கூறினார். காங்கிரஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து இந்த பார்முலாவை பின்பற்றி வந்தது.

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதனை உடைக்கிறது. 3வது விஷயம் என்னவென்றால் அரசியல் அதிர்வுக்கு அரசியல் அதிர்வு மூலமாக பதிலளிக்கின்றனர். மும்மொழி கொள்கையை 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் திமுக என்ன சொல்கிறது என்றால் மும்மொழி கொள்கையா? இருமொழி கொள்கையா? நாங்களே தேர்வு செய்து கொள்கிறோம் என்று கூறுகின்றனர். ஆனால் மத்திய அரசு நிதியை நிறுத்தி வைத்து கொண்டு மும்மொழி கொள்கையை செயல்படுத்த சொல்கிறது.

இது இருமொழி கொள்கைக்கு எதிராக உள்ளதாக திமுக கூறி வருகிறது. என்னை பொறுத்தவரை சிம்பள் என்பது வெறும் சிம்பல் தான். அதேபோல் தமிழகத்தை எடுத்து கொண்டால் பாஜக, ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தது. ஜெயலலிதாவின் அதிமுக அரசு வாஜ்பாய் அரசுக்கு சப்போர்ட் செய்தது. அதன்பிறகு ஹனிமூன் பிரியட்டாக வாஜ்பாய் அரசுடன் திமுக கூட்டணி வைத்தது. ஆனால் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி வழியில் வந்த திராவிட இயக்கம், ஆர்எஸ்எஸ்க்கு எதிராக இருந்தது. ஆர்எஸ்எஸ் ஒரே நாடு ஒரே மொழி கொள்கையை வைத்துள்ளது.

ஆர்எஸ்எஸ் எப்போதும் இந்தி, இந்து, இந்துஸ்தான் என்கிறது. இந்தி என்பது மொழியாகவும், இந்து என்பது மதமாகவும், இந்துஸ்தான் என்பது நாடு என கொண்டுள்ளது. ஆனால் திராவிட இயக்கம் அதில் இருந்து வேறுபடுகிறது. திமுக அரசியல் கட்சியாக 1960ல் வளர தொடங்கியது. அப்போது இந்தி எதிர்ப்பு தான் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் பாதையாக இருந்தது. தென்மாநிலங்கள் இந்தியை பொதுவாக விரும்பாமல் உள்ளன. திமுக இந்தி எதிர்ப்பு காரணமாக தான் முதலில் அரியணை ஏறியது. பாஜகவுக்கு அயோத்தி என்பது அரசியல் அஜன்டாவாக இருந்தது. அதுபோல் தான் திமுகவுக்கு இந்தி எதிர்ப்பு உள்ளது.

கேள்வி: தமிழக பட்ஜெட்டை இன்று தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். கல்வி துறைக்கு ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டி மத்திய அரசு ஒதுக்கவில்லை. அதனை தமிழக அரசு ஒதுக்கும் என்று கூறியுள்ளார். இதனை எப்படி நிர்வகிக்க போகிறார்கள்?

மாதவன் நாராயணன்: இது உண்மையிலேயே பெரியத்தொகை. சவாலானது. திமுக இதன் மூலம் மத்திய அரசு பணம் தரவில்லை என்பதை முன்நிறுத்துகிறது. அதேபோல் தான் ₹ சிம்பல் விவகாரத்தில் பாஜக நரேட்டிவ்வை செட் செய்ய விரும்புகிறது. இவை எல்லாம் நரேட்டிவ்ஸ் தான்.இந்த மோதல் பற்றி தமிழ் மக்கள் நினைப்பார்கள். தமிழ்நாட்டில் புதிய கட்சிகள் வந்துள்ளன. நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் திமுகவுக்கு வரலாம். இது எனது தனிப்பட்ட கருத்து. பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் பாஜக பக்கம் செல்லாமல் இருக்கும் பட்சத்தில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+