பொறந்தநாளுக்கு கூட வரலையாமே!.. அப்பா, அம்மாவை தவிக்கவிட்ட "வாரிசு" விஜய்.. ஊருக்குத்தான் உபதேசமா?
சென்னை: நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நேற்று தனியாக பிறந்த நாள் கொண்டாடிய சம்பவம் சமூகவலைதளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.
முன்னணி நடிகர்களில் ஒருவராக சிறந்து விளங்குபவர் விஜய். இவரை தனது படங்கள் மூலம் அறிமுகப்படுத்தி இன்று ஒரு பாக்ஸ் ஆபிஸ் ஹிட் நடிகராக மாற்றிய பங்கு நிச்சயம் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரைத்தான் சாரும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
இதை தாண்டி விஜய்யின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இவையெல்லாம் இருப்பதையும் மறுக்க முடியாது. விஜய்யை அவரது தந்தை செதுக்கியதுதான் அவர் இன்று முன்னணி நாயகனாக இருக்கிறார்.

தந்தை
ஆனால் அண்மைக்காலமாக தந்தைக்கும் மகனுக்கும் சுமுக உறவு இல்லை என கூறப்படுகிறது. விஜய்யை சினிமா துறையில் ஜொலிக்க வைத்த எஸ் ஏ சந்திரசேகருக்கு அவரை அரசியலிலும் சோபிக்க வைக்க ஆசை உள்ளது. இதற்கு காரணம் விஜய்க்கு இருக்கும் ரசிகர் பட்டாளம். விஜய் மக்கள் இயக்கத்தை நல்ல முறையில் கொண்டு சென்றால் அரசியலில் விஜய் ஒரு ரவுண்டு வரலாம் என்பது எஸ் ஏ சியின் கணக்கு.

விஜய் மக்கள் இயக்கம்
அதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டே கட்சியை தொடங்க வேண்டும் என கூறி விஜய்க்கே தெரியாமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ததாக தகவல்கள் வெளியானது. இதை எதிர்த்து தனது தாய்- தந்தை மீது விஜய் வழக்கு தொடர்ந்தார். விஜய்யின் எண்ணம் காலம் கனியும் போது புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என நினைக்கிறார். இதற்குத்தான் ஒரு நிகழ்ச்சியில் எந்த ரயிலில் ஏறினாலும் நாம் செல்லும் இடத்திற்கு செல்ல முடியாது, நாம் செல்ல வேண்டிய ஊருக்கான ரயிலில் பயணித்தால் மட்டுமே அந்த இடத்தை அடைய முடியும் என விஜய் சொன்னது தந்தைக்கு புத்திமதி சொல்வதாக பார்க்கப்பட்டது.

பீஸ்ட் படம்
இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் விழாவில் தனது தந்தை எஸ் ஏ சி குறித்து பாசத்துடன் பேசியிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே சுமுக நிலை நீடித்து வருவதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் நேற்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் மனைவி ஷோபா மட்டுமே இருந்தார். அவர் கணவருக்கு கேக் ஊட்டிவிடும் காட்சிகள் வெளியாகின.

புகைப்படங்கள்
இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை கண்ட நெட்டிசன்கள் விஜய் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லையா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. தாய், தந்தையை கவனியுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விஜய், அவருடைய தந்தையின் பிறந்தநாளுக்கு குடும்பத்தினருடன் வந்திருக்க வேண்டாமா என கேள்வி எழுப்புகிறார்கள்.
Recommended Video

சரமாரி கேள்வி
இதற்கு விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார். இத்தனை கருத்துகளை சொல்லும் கருத்து கந்தசாமிகளுக்கு அவர்களுடைய தாய், தந்தையின் பிறந்தநாள் குறித்த விஷயங்கள் தெரியுமா, இது விஜய்யின் தனிப்பட்ட பிரச்சினை இதில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள். தன் மகன் வரவில்லை என எஸ் ஏ சி வந்து உங்களிடம் சொன்னாரா, இல்லை பொதுவெளியில் வருத்தப்பட்டாரா? இதுவரை விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது பிள்ளைகளின் கொண்டாட்டங்கள் குறித்த புகைப்படங்கள் கூட வெளியானதில்லை. அது போல் தந்தையின் பிறந்தநாள் விழாவில் விஜய் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுவிட்டு அந்த புகைப்படத்தை தம்மட்டம் அடிக்காமல் இருந்திருக்கலாம், இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிரச்சினையா என சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications