எல்காட் எம்டி ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் திடீர் ராஜினாமா.. பின்னணி என்ன?
சென்னை: ஐஏஎஸ் பதவியிலிருந்து அனீஷ் சேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ELCOT மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் ஐஏஎஸ் பணியில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த அனீஷ் சேகர் முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய ஐடி அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் நல்ல நட்புடன் இருப்பதால் அவர் ஐடி துறைக்கு சென்னைக்கு எல்காட் எம்டியாக மாற்றப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் அமைச்சரவையில் புதிய மாற்றம் செய்த கையோடு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். கடந்த சில மாதங்களாக எல்காட் எம்டியாக இருந்த அனீஷ் சேகர் இன்று தனது ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியராக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை திறம்பட பணியாற்றியவர் அனீஷ் சேகர் ஐஏஎஸ்.
இதனிடையே அனீஷ் சேகரின் ராஜினாமா கடிதத்தை தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா ஏற்றுக் கொண்டுள்ளார். மருத்துவரான அனீஷ் சேகர், தனது சொந்த மாநிலமான கேரளத்தில் மருத்துவர் பணியைத் தொடர உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சேர்ந்த அனீஷ் சேகர், கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
அனீஷ் சேகர் பல்வேறு விதமான அதிரடி மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளையும் அவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்டார். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தை வலியுறுத்தும் வகையில், ஆட்சியர் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு சைக்கிளிலேயே சென்று கவனத்தை ஈர்த்தார்.
இவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். துடிப்பான இளைஞராக பணியாற்றி வந்த அவர் தன்னுடைய சொந்த காரணத்திற்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications