5 வருஷம் ஓடிடும்.. அப்பறம் ராகுல்தான் பிரதமர்.. பரோட்டா சூரி போல் கோட்டை அழித்து கணக்கு போடும் மாஜி!
Recommended Video
சென்னை: 5 வருஷம் வேகமாக ஓடிவிடும். அப்புறம் ராகுல்காந்திதான் பிரதமர் என திருச்சி எம்பியும் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான எஸ் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தவர் ஸ்டாலின். இதை சில கட்சிகள் ஏற்க மறுத்துவிட்டன.
ஆனால் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் நாற்காலிக்கு ஆசைப்பட்டனர். அதில் ராகுல் காந்தியும் ஒருவர். என்ன ஒரு வித்தியாசம் என்றால், ராகுல் காந்தி அப்பதவிக்கு நிர்பந்திக்கப்பட்டார்.

52 இடங்களில் வெற்றி
கடைசியில் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட பெறமுடியவில்லை. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுவிட்டது.

ராஜினாமா
இந்த நிலையில் கீழ்மட்டத் தலைவர்கள் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை என்ற கடுங்கோபத்தில் ராகுல்காந்தி உள்ளனர். இந்த கோபத்தின் வெளிப்பாடே தலைமை பொறுப்பை ராஜினாமா செய்ய முன்வந்தது.

அடுத்த பிரதமர்
இந்த நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி தொகுதி எம்பியுமான எஸ் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என தெரிவித்துள்ளார்.

வியூகம்
இவரது இந்த பேச்சு பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்குள்ளாகியது. பரோட்டா சூரி போல் கோட்டை அழித்துவிட்டு மீண்டும் முதலில் இருந்து தொடங்குவது போல் திருநாவுக்கரசரின் பேச்சு உள்ளதாகவும் வெற்றிக்கு வியூகம் வகுக்காமல் கோபத்தில் உள்ள ராகுல் காந்தியை சாந்தப்படுத்த இதுபோன்ற ஐஸ்கட்டிகளை தலையில் வைப்பதாகவும் மக்கள் கருதுகின்றனர்.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
டெல்லியில் முதல்வர் விஜய் - சோனியா, ராகுல் சந்திப்பு திடீர் ரத்து.. என்ன நடந்தது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications