குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாம்.. ஆட்டுக்காக ஓநாய் அழுவுது.. எஸ் வி சேகர் கடும் தாக்கு
சென்னை: குடும்ப கட்சியான திமுகவுக்கு நாட்டு நலனில் அக்கறையிருக்கிறதாம். ஆடு நனையுதேனு ஓநாய் அழுவுவது போல் உள்ளது என பாஜக பிரமுகர் எஸ் வி சேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 311 பேரும் எதிர்ப்பாக 80 பேரும் வாக்களித்தனர்.
இந்த சட்டத்திருத்தத்தின்படி மேற்கண்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக உள்ள இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தினரும் குடியுரிமை அளிக்க அனுமதி அளிக்க வகை செய்யும். இவர்கள் இந்தியாவுக்குள் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் குடிபெயர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஒநாய் அழுவுது.
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 10, 2019
இந்த மசோதா நாளை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து எஸ்வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஓநாய் அழுவுது என தெரிவித்துள்ளார்.
-
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்! -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ரூ.258 கோடி போதைப்பொருள் வழக்கு பரபரப்பு: விஜய் அரசுக்கு எதிராக திமுக அதிரடி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications