Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Priyanka: ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் ஆடிய பிரியங்கா! அதை சொல்ல நீங்கள் யார்? எஸ்.வி.சேகர் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் மனைவி பிரியங்கா நடனமாடி வழி அனுப்பி வைத்த சம்பவத்தை பலர் விமர்சித்து வரும் நிலையில் அவரது துக்கத்தை இப்படி வெளிப்படுத்தக் கூடாது என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என எஸ்.வி.சேகர் கொந்தளித்துள்ளார்.

Robo Shankar Priyanka

இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, அவரது கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடியதை பலர் தவறாக விமர்சித்து வருகிறார்கள். இதெல்லாம் ஒரு கலாச்சாரமா என கேட்டு வருகிறார்கள்.

ஒருவருடைய இழப்புக்கு அவர்களுக்கு நெருங்கியவர்கள் அந்த இழப்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. சில பேர் வீட்டில் இறப்பு என்றால் சப்தம் போட்டு அழுவார்கள். இன்னும் சிலர் அமைதியாக அழுவார்கள். அதற்காக அவர்களுக்கு சோகம் இல்லை என்றாகிவிடாது.

இறுதி பயணம்

ரோபோ சங்கரின் இறுதி பயணத்தின் போது, இனி அவரை பார்க்க முடியாது என்ற துக்கத்தின் வெளிப்பாட்டை பிரியங்கா நடனம் மூலம் காட்டியுள்ளார். அதை விமர்சிக்க யாருக்கும் அருகதையே இல்லை. அவர் ஒன்றும் தனது கணவர் மரணத்திற்காக உங்கள் வீட்டு வாசலில் நின்று நடனம் ஆடவில்லை. சமூகவலைதளம் இருக்கே என்பதற்காக யாரையும் புண்படுத்தாதீர்கள். எத்தனை ஆண்டுகளானாலும் ரோபோ சங்கரின் அந்த மரணம், அவருடைய மனைவிக்கு கொடுக்கக் கூடிய பாதிப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது. தயவு செய்து அடுத்தவர்களின் சோகத்தையோ துக்கத்தையோ விமர்சனம் செய்யாதீங்கள். அந்த துக்கத்தை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவரவர் மனோபாவம். அது அவருடைய குடும்ப விஷயம் என எஸ்.வி.சேகர் கேட்டுக் கொண்டார்.

மஞ்சள் காமாலை

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் கடந்த 16ஆம் தேதி ஷூட்டிங்கிலேயே மயங்கி விழுந்தார். அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவருடைய குடலில் இருந்து ரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து அவரது உறுப்புகள் செயலிழந்ததால் அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 18ஆம் தேதி இரவு காலமானார்.

அஞ்சலி செலுத்திய நடிகர்கள்

அவருடைய உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு கமல்ஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், நளினி, சூரி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். சின்னத் திரை பிரபலங்களும் இந்த இறப்புக்கு நேரில் போய் அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கர் காசு சேர்த்ததை விட நல்ல மனிதர்களை சேர்த்து வைத்திருந்தார் என்பது அவருக்கு அஞ்சலி செலுத்தியதிலும் இறுதி ஊர்வலத்திலும் தெரிகிறது.

மின்மயானம்

அவருடைய உடல் வளசரவாக்கத்தில் பிருந்தாவன் காலனியில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்ய கொண்டு வரப்பட்டது. அப்போது அந்த மின்மயானத்தில் துக்கம் தாளாமல் பிரியங்கா ரோபோ சங்கர் தனது கணவருக்கு மிகவும் பிடித்த நடனத்தை ஆடி வழி அனுப்பி வைத்தார். அவர் ஆடிய ஆக்ரோஷ நடனத்தை பார்த்து பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். "கணவன் மரண ஊர்வலத்தில் எந்த மனைவியாவது இப்படி டான்ஸ் ஆடுவார்களா, நம் கலாச்சாரம் எங்கே போகிறது" என பலர் தேவையில்லாத கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மோசமான மனநிலை

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகளால் கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா நடனமாடியதால்தான் கலாச்சாரம் சீரழிந்துவிட்டதாக சொல்வது மிகவும் மோசமான மனநிலையையே காட்டுகிறது. அவர் பெண் என்பதால்தான் அப்படி கூறுகிறார்களா என்ற கேள்வியையும் பலர் எழுப்பியுள்ளனர். எஸ்.வி.சேகர் சொல்லியது போல் யார் எப்படி தங்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என சொல்ல யாருக்கும் அருகதையும் இல்லை, உரிமையும் இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+