காங்கிரஸ் செய்தது துரோகம்.. ஸ்டாலின் தோல்வி வருத்தம் அளிக்கிறது.. எஸ்வி சேகர் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த தேர்தலில் மிகப்பெரிய வருத்தம் திமுக தோல்வியைவிட முதல்வர் ஸ்டாலின் தோல்வி பெற்றது தான். இதனை மக்கள் செய்த தவறாகத் தான் நான் பார்க்கிறேன் என்று எஸ்வி சேகர் கூறினார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து துரோகம் செய்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய்யின் தவெக வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மைக்கு இன்னும் 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டதால் முதலில் அதிமுகவிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகின. அப்போது அவர்கள் துணை முதல்வர் அல்லது சபாநாயகர் பதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பட்டது.

S Ve Shekher says Congress Betrayal DMK Alliance MK Stalin s Defeat Is Painful

மிகப்பெரிய வருத்தம்

விஜய்யுடன் உடனே காங்கிர்ஸ் கட்சி நிபந்தனையுடன் நேற்று கூட்டணி வைத்தது. திமுகவுடன் கூட்டணியை முறித்து, விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது. இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் செய்தது துரோகம் என எஸ்வி சேகர் கூறியுள்ளார். எஸ்வி சேகர் கூறியதாவது:- நான் திமுக - அதிமுக பேச்சுவார்த்தை நடக்கிறதை பார்க்கவில்லை..

கேள்விப்படுகிறேன். நேற்று டிவி சேனல்களில் பார்த்தேன்.. தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும். இந்த தேர்தலில் மிகப்பெரிய வருத்தம் திமுக தோல்வி தான்.. அதைவிட பெரிய வருத்தம் முதல்வர் ஸ்டாலின் தோல்வி பெற்றது தான். இதனை மக்கள் செய்த தவறாகத் தான் நான் பார்க்கிறேன்.

காங்கிரஸ் செய்தது துரோகம்

விளம்பர கவர்ச்சி, சினிமா கவர்ச்சியை வைத்து மட்டுமே எதையும் செய்ய முடியாது.. சரி, நல்லது நடக்கட்டும். வட இந்திய அரசியல்.. நான் 1985 இல் சொன்னேன்.. என் டிராமாவில் ஒரு டயலாக்.. 'நான் அன்னைக்கே சொன்னேன்..டெல்லி காரனை நம்பாதே கவுத்துருவான் என்று..' அது தான் இன்று நடந்து இருக்கு..

காங்கிரஸ் திமுகவிடம் ஒரு எம்பி சீட்டை வாங்கிக் கொண்டு இப்படி செய்ததது மிகப்பெரிய துரோகம்.. இதற்கான விலை வந்து என்.டி.ஏ கூட்டணியில் பிளவுகளால் ராகுல் காந்தி விரைவில் உணர்வார். கான்வாய் கொஞ்சம் அவசரப்பட்டு விஜய்க்கு கொடுத்ததாகத் தான் நான் பார்க்கிறேன்" என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+