சாயம் வெளுக்குது.. வெறும் 5% மட்டும் நடந்த அண்ணாமலை.. எஸ்வி சேகர் "பகிர்ந்த" அந்த போட்டோ.. போச்சே
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் குறித்து எஸ்.வி சேகர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை திரும்பி உள்ளார். 11வது நாளாக தனது நடைப்பயணத்தை மீண்டும் ஆரம்பித்து உள்ளார். 10 நாள் நடைப்பயணம் மேற்கொண்டவர் திடீரென சில காரணங்களுக்காக சென்னை சென்றார்.

அங்கே இரண்டு நாட்கள் தங்கி இருந்தவர் மீண்டும் பயணத்தை தொடங்கி உள்ளார். இன்று திருமங்கலத்தில் பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அங்கே மக்களை சந்திக்கிறார். அவர் மதுரையில் பெரிய பொதுக்கூட்டம் நடத்துவார் என்று கூறப்பட்ட நிலையில்தான் இடையில் இப்படி பிரேக் எடுத்து பயணம் மேற்கொண்டு வருகிறார்.
விமர்சனம்: இந்த நிலையில்தான் அண்ணாமலையின் நடைபயணம் குறித்து எஸ்.வி சேகர் கடுமையான விமர்சனங்களை வைத்து உள்ளார்.பெரும்பாலும் கேரவனில் பயணம் செய்யும் இவர் ராமநாதபுரம் - சென்னை வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த பயணம் தற்போது சிவகங்கை தாண்டி சென்று கொண்டு இருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார். அண்ணாமலை செல்லும் வழியில் அவர் ஓய்வு எடுக்க இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இடை இடையே அவர் உறங்க, சாப்பிட இந்த கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. காவி நிறத்தில் பாஜகவின் சாதனைகளை பட்டியலிட்டு கேரவன் அமைக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி வேட்டியுடன் இருக்கும் புகைப்படம் இந்த கேரவன் கதவில் அமைக்கப்பட்டு உள்ளது. பல நவீன வசதிகளுடன் இந்த கேரவன் உட்பகுதி வடிவமைக்கப்பட்டு உள்ளது. மெத்தை படுக்கை , ஏசி, மைக்ரோவேவ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் உள்ளேயே சமைத்துக்கொள்ள வேண்டும்.

நவீன கழிப்பறை, குளியலறை என்று பொதுவாக கேரவனில் இருக்கும் வசதிகள் எல்லாம் இதில் உள்ளன. இந்தநிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் மேற்கொண்டு வரும் நடைப்பயணத்தில் அவர் பெரிதாக நடக்காமல், காரிலேயே பயணம் செய்வதாக கூறப்படுகிறது.
நடக்கவில்லை: அதாவது. பொதுவாக அரசியல்வாதிகளின் நடைப்பயணம் என்றாலே, காலை 6 மணிக்கெல்லாம் பயணத்தை துவக்குவார்கள். திருச்செந்தூரை நோக்கி ஒரு காலத்தில் கலைஞர் நடந்த நடைப்பயணமும் சரி, வைகோ நடந்த நடைப்பயணமும் சரி, கடந்த ஆண்டு ராகுல் நடந்த நடைப்பயணம் சரி... காலை 6 மணிக்கெல்லாம் நடக்கத் துவங்கினர். இடையில் காலை உணவினை போகும் இடத்திலேயே முடித்துக் கொள்வர்.
பிறகு மீண்டும் நடைப்பயணம் தொடங்கும். 12 மணி வரைக்கு பயணத்தை முடித்துக் கொண்டு விட்டு மதிய உணவுக்காகத்தான் காரில் பயணிப்பார்கள். அதன் பிறகு மாலை 4 வரை ஓய்வெடுப்பர். அந்த சமயத்தில் கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்துவார்கள். அதன் பிறகு மாலை 4 மணிக்கு பயணம் மீண்டும் தொடரும். இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் சராசரியாக ஒரு நாளைக்கு 50 கி.மீ.வரை நடப்பார்கள். ஆனால், அண்ணாமலையோ தினமும் காலையில் 9:30-க்குத்தான் பயணத்துக்கே ரெடியாகிறாராம். 2 கிலோமீட்டர் நடக்கிறார். பிறகு சட்டென்று கேரவனில் ஏறிக்கொள்கிறார். வாகனம் புறப்படுகிறது.
சிலபல கிலோ மீட்டர்கள் கேரவனில் சென்றதும் அந்த பகுதியிலுள்ள மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்து சிலரிடம் பேசுகிறார். மீண்டும் கேரவனில் பயணம். குறிப்பிட்ட தூரம் சென்றதும் மதியம் சாப்பாடு. அப்படியே கேரவனில் ரெஸ்ட். கட்சிக்காரர்களிடம் விவாதிக்கிறேன் என்ற பேரில் இந்த ரெஸ்ட் எடுக்கிறார் அண்ணாமலை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
ஊடகம்: இது தொடர்பாக செய்தித்தாள் ஒன்றில் அண்ணாமலை தினமும் 5 % சதவிகிதம் கூட நடப்பது இல்லை, 95 சதவிகிதம் அவர் காரில்தான் செல்கிறார் என்று விமர்சனம் வைக்கப்பட்டு செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இதை பகிர்ந்த நடிகர் எஸ்.வி சேகர் சாயம் வெளுக்குது என்று விமர்சனம் செய்துள்ளார். எஸ். வி சேகர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்தான் இந்த புகைப்படத்தை பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார்.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
அண்ணாமலை+ராகவா லாரன்ஸ்+விசாகன்! இது புது காம்பினேஷனா இருக்கே! ரெடியாகும் மாஜி ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆபீசர்ஸ் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications