சாத்தான்குளம்: சிபிசிஐடி விசாரணையே நல்லாதானே போய்ட்டிருக்கு, தொடரலாமே.. மக்கள் எதிர்பார்ப்பு இதுதான்
சாத்தான்குளம் மரண வழக்கில் சிபிஐ விசாரணை துரிதமாக நடக்கிறது
சென்னை: "இப்போ எதுக்கு சிபிஐ விசாரணை? நல்லாதானே வழக்கு நடந்துட்டு இருக்கு" என்று சாத்தான்குளம் மரண வழக்கு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். விசாரணை விரைவில் முடிந்து தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும் என்பதும் மக்கள் கருத்தாக உள்ளது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை, தந்தை, மகன் கொல்லப்பட்டபோது இருந்த வேகம் மொத்தமாகவே இப்போது அடங்கியது போல உள்ளது.. ஆரம்பத்தில் கைது, வழக்கு, விசாரணை என்ற அதிரடிகள் இப்போது மெல்ல குறைந்து வருகின்றன.

இந்த வழக்கை மதுரை கோர்ட் தாமாக முன்வந்து எடுக்கும்போது, தமிழக மக்களுக்கு ஒருவித நம்பிக்கை கிடைத்தது.. அதன்படியே பரபரவென வழக்கும் நடந்தது.. சிபிஐ விசாரணை நடத்துவதற்குள் சாட்சியங்கள் கலைக்கப்பட்டுவிடும் என்பதால், அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று மதுரை கோர்ட் உத்தரவிட்டது.
அந்த உத்தரவுப்படிதான் சிபிசிஐடி அதிகாரிகளும் விசாரணையை முடுக்கி 5 பேரை கைது செய்து உள்ளே வைத்தனர்.. இப்போது சிபிஐ விசாரணையை ஏற்று நடத்தி வருகிறது.. இது பொதுமக்களிடையே சலசலப்பையும் தந்தது.. "ஏன் நல்லாதானே போயிட்டு இருக்கு? எதுக்காக சிபிஐ? நம்ம ஊர்ல நடக்கிறதை டெல்லியில இருந்து வந்து கண்டுபிடிச்சு தந்தால்தான் சாத்தியமா?" என்று சலசலக்க தொடங்கினர்.
அதுமட்டுமல்ல, "இனி இந்த விசாரணை அவ்வளவுதான், நீதி கிடைச்ச மாதிரிதான்" என்று வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்துவிட்டனர். உண்மையில் இந்த வழக்கினை சிபிஐ எப்படி கையாளுவர்கள் என்று தெரியவில்லை.. ஏனெனில் அந்த விசாரணையே தனி தன்மையுடன் இருக்கும்... இதுவரை சிபிசிஐடி விசாரணையில் என்ன நடந்துள்ளது என்பதை அடிப்படையாக வைத்து, அதில் உள்ள தகவல்கள், குறிப்புகள் அடிப்படையில் விசாரணையை ஆரம்பிப்பார்கள்.
இந்த வழக்கு, மாற்றப்படுவதற்குள் இறந்த பென்னிக்ஸ் குறித்து ஏகப்பட்ட முரண்பட்ட செய்திகளும் பரவ ஆரம்பித்தன.. ஆரம்பத்தில் செல்போன் வாங்குவதில் பிரச்சனை என்றார்கள், பிறகு விஐபி பெண்ணை பென்னிக்ஸ் காதலித்தார், அதனால்தான் பழி வாங்கினர் என்றார்கள்.. பிறகு கட்சி பின்னணி என்றார்கள்.. ஆனால் எது உண்மையான காரணம் என்று இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.
ஆனால் திசை திருப்புவதற்காக சொல்லப்பட்டு வருகிறது என்பது மட்டும் தெரிகிறது.. அதனால்தான் இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டுமே என்ற எதிர்பார்ப்பு தமிழகத்துக்கே ஏற்பட்டுள்ளது... எப்படி பார்த்தாலும், சிபிஐ இதை முறைப்படியும், துரிதமாகவும் விசாரிக்க வேண்டும் என்பதும் அனைவரின் எண்ணமாக உள்ளது.. தற்போது தொய்வாக உள்ளதை போல இந்த வழக்கு தென்பட்டாலும், நீதிமன்றத்தின் மீதும், காவல்துறை மீதும் மக்கள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை!
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications