சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலை விவகாரம்... தமிழகத்திலும் போராட்டம் பரவியது... கண்ணாடிகள் உடைப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலை விவகாரம்... தமிழகத்திலும் போராட்டம் பரவியது.. வீடியோ

    சென்னை: சபரிமலை விவகாரம் தொடர்பாக, கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், தமிழகத்திலும் போராட்டம் தொடங்கி உள்ளது.

    கேரளாவில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு ஆண்டாண்டு காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்தாண்டு செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்று தீர்ப்பு வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து சில பெண்கள் கோவிலுக்குள் செல்ல முயன்று, போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    பெண்கள் தரிசனம்

    பெண்கள் தரிசனம்

    இந்நிலையில் நேற்று அதிகாலை, கேரளா மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டினை சேர்ந்த இரண்டு பெண்கள் பிந்து மற்றும் கனகதுர்கா சபரிமலைக்கு சென்று அய்யப்பனை வழிபட்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கோவிலின் நடை பரிகார பூஜைக்காக மூடப்பட்டது.

    தமிழகத்தில் போராட்டம்

    தமிழகத்தில் போராட்டம்

    பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, கேரளாவில் ஆங்காங்கே போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் வெடித்துள்ளன. கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு

    ஹோட்டல் கண்ணாடிகள் உடைப்பு

    சென்னை ஆயிரம் விளக்கு கீரிம்ஸ் ரோட்டில் உள்ள ரெயின் டிராப்ஸ் ஹோட்டல் மற்றும் கேரளா சுற்றுலா இல்லத்திற்கு வந்த சிலர், உருட்டு கட்டையால் பீல்டிங்கின் கீழே இருந்த கண்ணாடிகளை சாமியே சரணம் அய்யப்பா என்று கூறி உடைத்துவிட்டு சென்றனர்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    இதற்கிடையே, ஈரோடு மாவட்டம் காடப்பநல்லூரில் உள்ள கேரளா ஆளுநர் சதாசிவத்தின் வீட்டை, விசுவ ஹிந்து பரீஷத் அமைப்பினர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    English summary
    The Protest against the Sabarimala issue in Kerala has started also in Tamil Nadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X