‛‛இந்த 3ல் ஒரு தொகுதி வேண்டும்’’.. ஜான்பாண்டியன் வைத்த கோரிக்கை.. பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை
சென்னை: தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன் பாஜக தலைவர்கள் இன்று தொகுதி பங்கீடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 3 தொகுதிகளை குறிப்பிட்ட ஜான் பாண்டியன் அதில் ஒரு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என கூறியுள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக கழற்றிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் பாஜக தனது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு பேச்சவார்த்தை நடத்தி வருகிறது.

அந்த வகையில் பாஜக கூட்டணியில் ஜான்பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கிறது. பாஜக கூட்டணியில் பயணிக்க ஜான்பாண்டியன் தயாராக உள்ளார். இந்நிலையில் தான் பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் ஒரு தொகுதியை கேட்டுகிறார்.
இத்தகைய சூழலில் தான் இன்று பாஜக தலைவர்கள் ஜான் பாண்டியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் வீட்டுக்கு இன்று சென்று அவரை சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினர்.
அந்த சமயத்தில் ஜான் பாண்டியன் தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் 3 முக்கிய தொகுதிகளை குறிப்பிட்டு அதில் ஒன்றை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி தென்காசி தனித்தொகுதியை ஒதுக்க வேண்டும் என ஜான் பாண்டியன் கேட்டுள்ளார். இல்லாவிட்டால் இரண்டாவதாக திருநெல்வேலியை (பொதுத்தொகுதி) ஒதுக்க வேண்டும். அதற்கும் மறுத்தால் ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதில் தென்காசி தனித்தொகுதியாகும். திருநெல்வேலி பொதுத்தொகுதி என்றாலும் கூட ஜான் பாண்டியனின் சொந்த தொகுதியாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்த ஜான் பாண்டியனின் நாடாளுமன்ற தொகுதி திருநெல்வேலியாகும். ராமநாதபுரம் தொகுதியில் ஜான் பாண்டியன் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் உள்ளன. இதனால் இந்த 3 தொகுதிகளில் ஒன்றை ஒதுக்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை கேட்ட பாஜக தலைவர்கள் கட்சி தலைமையுடன் பேசி இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications