Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜேம்ஸ் வசந்தன் வாழ்வில் இத்தனை சோகங்களா.. “எல்லாம் இழந்து அனாதையா..” உருக வைக்கும் பேஸ்புக் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுவயதிலேயே குடும்பத்தினர் இடையேயான சச்சரவுகளின் காரணமாக உறவுகளைவிட்டு பிரிந்து தனியாக அனாதையாக நின்றதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "எனக்கு உறவினர்கள் தொடர்பே கிடையாது. இத்தனை ஆண்டுகளில் இதுவரை யாரும் என் வீட்டுக்கு வந்தது கிடையாது. உறவினர் என்றதும் சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா என்று மட்டும் இல்லை; என் அண்ணன்களே வந்துபோனது கிடையாது. எனக்கு ஆறு அண்ணன்கள், ஒரு அக்கா.

நான் சிறுவனாயிருந்தபோது அவ்வப்பொழுது உறவினர்கள் வந்தபோதெல்லாம் ஒரே சத்தமும், வாக்குவாதமும், உறவு அரசியல்களும்தான் பார்த்திருக்கிறோம் நாங்கள். எங்கள் அம்மா இதிலெல்லாம் ரொம்ப நுழையமாட்டார்கள். அமைதியாக ஒதுங்கியே இருப்பார்கள். அம்மாவுடைய அக்கா (பெரியம்மா) வும் அப்படித்தான். ரொம்ப அமைதி.

Sad moments in Music director James Vasanthan family

எங்கள் சித்தி, அத்தை, மாமா எல்லாரும்தான் அந்த உரத்த காட்சிகளின் இயக்குநர்கள். "இனி இந்த வீட்டு வாசப்படி மிதிக்கமாட்டேன்" வசனம்தான் வழக்கமான இறுதிக் காட்சி. அது எங்களுக்குப் பழகிப்போன ஒன்று. பிள்ளைகள் நாங்களெல்லாம் ஒரு அறைக்குள் அமர்ந்து சிரித்துக் கொண்டிருப்போம். நான் என் தாத்தாவை (அப்பாவின் தந்தை) ஒரு சில முறை பார்த்திருக்கிறேன். அம்மாவின் தந்தையை ஒரேமுறை பார்த்த நினைவுதான் இருக்கிறது. சின்ன வயதிலிருந்தே என்னவோ இந்த சூழல்தான் எங்கள் வீட்டில்.

வளர்ந்த பிறகுதான் இதைப்பற்றியப் புரிதல் வந்தது. மற்ற குடும்பங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் ஏக்கமாகவும் இருந்தது. அப்பா, அம்மாவின் மறைவுக்குப் பிறகு குடும்பம் சிதறிப்போனது. திருச்சி, கோவை, சேலம், சென்னை, ஆஸ்திரேலியா என ஆளுக்கொரு இடத்தில் இருந்தோம். திருச்சிக்கு நிகழ்ச்சிகளுக்கு போய்வரும்போது அங்கிங்கு விளம்பரங்களிலும், செய்தித்தாளிலும் பார்த்து மூத்த அண்ணன் "திருச்சி வந்திருந்தாயாமே?" என்று ரொம்ப நாள் கழித்து கேட்பார்.

Sad moments in Music director James Vasanthan family

அவர் ரொம்ப நல்லவர். ரொம்ப வெகுளி. அப்பாவின் மறைவுக்குப் பிறகு எங்களையெல்லாம் வளர்த்தெடுத்த தியாகி. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். (பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில் என்னைக் கொடுமைப்படுத்தியதைத் தவிர) ஒரே ஒரு முறை எங்கள் மூத்த அண்ணன் விருப்பத்தின்படி 2004-ம் ஆண்டு எல்லாரும் ஒன்றாக என் வீட்டில் கூடினோம். ஒரு அத்தை (அப்பாவின் தங்கை) மட்டும் வந்திருந்தார்கள். அவர் மட்டுந்தான் அழைக்கப்பட்டிருந்தார்.

வழக்கம்போல அண்ணிகளின் முனகல்களும், புகார்களும் அந்த அரசியல் சூழலை உருவாக்கின. எனக்கும் என் மனைவிக்கும் இதெல்லாம் வராது. வேடிக்கை பார்ப்பதோடு சரி. அம்மா இறந்த நாளன்று நான் கடைசியாகப் பார்த்த ஒரு அண்ணனை அன்றுதான் பார்த்தேன், 22 ஆண்டுகளுக்குப் பிறகு. சில கசப்புகளும், வருத்தங்களும் இருந்தன எனக்குள் பல ஆண்டுகளாய். ஆனால் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் எல்லாம் மறந்துபோயிற்று.

சுற்றி அமர்ந்து உண்டோம், பேசினோம், சிரித்தோம், கொஞ்சம் அதிகமாகவே சிரித்தோம், கடற்கரை சென்று விளையாடினோம், பிரிந்தோம். அதுதான் இறுதி சந்திப்பு. கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்த அண்ணனும், மூத்த அண்ணனும் இறந்துபோனார்கள். மூத்த அண்ணனை அந்த இறுதி சமயத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவருடன் இருந்து பார்த்துக்கொண்டதுதான் கொஞ்சமேனும் அவருக்கும் எனக்கும் ஆறுதல்.

Sad moments in Music director James Vasanthan family

நெடுங்கதை.. but complicated எங்கள் குடும்பக் கதை. இது அதன் சுருக்கம். இன்று ஒரு நிகழ்வின் காரணமாக இதெல்லாம் அசைபோட வேண்டி வந்தது.
(படத்தில் இருப்பது என் அம்மா)" என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு கீழ் பலரும் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆறுதலாக கருத்திட்டு இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் விளக்கம் அளித்து உள்ளார்.

அதில், "என் வாழ்க்கை சரிதைப் பகிர்வைப் பார்த்து சிலர் தவறாகப் புரிந்துகொள்ளலாம். நான் ரொம்ப சோகமாகிவிட்டேனோ என்று! அவர்களுக்காக ஒரு விளக்கம். எல்லாவற்றையும் இழந்து திருச்சியில் ஒரு நாள் அனாதையாக, தனியாக நின்றபோதும் கூட இதுவரை என் வாழ்நாளில் தனிமையில் அழுததே கிடையாது. எதற்கும் அசந்தது கிடையாது. மிரண்டது கிடையாது. இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்கிற நம்பிக்கைக் கனவோடு சென்னை வந்தவன் நான். மற்றதைத் திரையில் கண்டீர்கள்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+