அரசியல் குறித்து பேச அழைத்த ரஜினிகாந்த்.. நாசுக்காக மறுத்த சகாயம்.. பொதுக் கூட்டத்தில் அம்பலம்
சென்னை: ரஜினிகாந்தின் அழைப்பை சகாயம் நிராகரித்ததாக சகாயத்தின் வரலாறு குறித்த வீடியோவில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசியலுக்கு வருமாறு அழைக்கும் பொதுக் கூட்டம் ஆதம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக் கூட்டத்தில் அரசியல் களம் காண்போம் வாருங்கள் நேர்மையாளரே ஊழலற்ற ஆட்சியை தருவோம் என்பதை முன்னிறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான பஸ்களில் இருந்து இளைஞர்கள், ஆதரவாளர்கள் வந்தவண்ணம் உள்ளார்கள். இந்த பொதுக் கூட்டத்தில் சகாயத்தின் வரலாறு குறித்து ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

மீடியா
அதில் ரஜினியை சகாயம் சந்தித்ததாகவும் அவருடன் இணைந்து அரசியல் செய்ய சகாயம் ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாகவும் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன. இதில் துளி கூட உண்மை இல்லை. நடந்தது என்னவெனில் அரசியல் குறித்து பேச தன்னை வந்து சந்திக்குமாறு சகாயத்திற்கு ரஜினி தரப்பிலிருந்து அழைப்பு வந்தது.

நாசுக்காக நிராகரிப்பு
இந்த அழைப்பை சகாயம் நாசுக்காக நிராகரித்துவிட்டார். இதுவரை அரசியல் குறித்து பேச ரஜினியை சகாயம் நேரில் சந்தித்ததோ போனில் பேசியதோ கிடைக்காது. மேலும் ரஜினிக்கும் சகாயத்திற்கும் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் அதிகம் இருப்பதாக ஆதரவாளர்கள் சொன்னார்கள்.

சம்பவங்கள்
இதை அடுத்து ரஜினியை சகாயம் சந்திக்கவே இல்லை என்ற தகவல் வீடியோவில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த வீடியோவில் சகாயத்தின் நேர்மையை பறைசாற்றும் விதமாக சில சம்பவங்கள் மேற்கோள்காட்டப்பட்டன. சகாயம் முதல்வர் வேட்பாளராக களம் இறங்க வேண்டும் என ஆதரவாளர்கள் வலியுறுத்தி பேசி வருகிறார்கள்.

முதல்வர் வேட்பாளர்
முன்னதாக சகாயத்தை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி ஒரு இணையதளத்தில் சர்வே நடத்தினார்கள் ஆதரவாளர்கள். இதில் 1 கோடி பேர் இலக்கு. முதல்வர் வேட்பாளராக வாருங்கள் என நிறைய பேர் கோரிக்கை விடுத்து பதாகைகள் ஏந்தி சகாயத்தின் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications