Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது.. லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார்.. சாகித்ய அகாடமி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவித்துள்ளது சாகித்ய அகாடமி.

தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 'தன்வியின் பிறந்தநாள்' சிறார் சிறுகதை நூலுக்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Literature Sahitya akademi

யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. இவர் 1966ல் பட்டுக்கோட்டையில் பிறந்தவர். கவிஞர், புனைகதையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் யூமா வாசுகி.

Tamil Literature Sahitya akademi

ஏற்கனவே, மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை 'கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் யூமா வாசுகி.

Tamil Literature Sahitya akademi

'விஷ்ணு வந்தார்' சிறுகதை நூலுக்காக இளம் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ரகுராமன் மே 23 ஆம் தேதி 1990 பிறந்தவர். இவர் இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு 'விஷ்ணு வந்தார்'. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன்.

Tamil Literature Sahitya akademi

பால புரஸ்கார் விருது வென்ற எழுத்தாளர் யூமா வாசுகி, யுவ புரஸ்கார் வென்ற லோகேஷ் ரகுராமன் ஆகிய இருவருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது 'தன்வியின் பிறந்தநாள்' நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்!

Tamil Literature Sahitya akademi

காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்குத் தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+