ஐபிஎல்லுக்கு அப்பறம் அதிக ஆக்ரோஷமா? பாண்ட்யா என் ஃப்ரண்டு தான்.. சீக்ரெட்டை பகிர்ந்த சாய் கிஷோர்!

இந்தியன் பிரீமியர் லீக் போல தமிழகத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கடந்த 9 சீசன்களாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல இளம் வீரர்கள் ஐபிஎல்-க்கு சென்று அங்கிருந்து இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளனர்.
சாய் சுதர்சன், சாய் கிஷோர், நடராஜன் உள்ளிட்ட பலரை அப்படி குறிப்பிடலாம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ஒன்பதாவது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை மூன்று கட்டங்களாக நடைபெற்று இருக்கிறது. கோவை, சேலம், நெல்லையில் போட்டிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் தற்போது கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகள் திண்டுக்கல் வந்துள்ளன. இன்று நாளையும் நான்கு லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், மதுரை பேன்தஸ் அணியை சந்திக்கிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
நாளை திருப்பூர் தமிழாஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகளும் மோதுகின்றன. அன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன. தொடர்ந்து ஜூலை ஒன்றாம் தேதி குவாலிபயர் 1, இரண்டாம் தேதி எலிமினேட்டர், நான்காம் தேதி குவாலிஃபயர் 2, 6ஆம் தேதி இறுதி போட்டி திண்டுக்கல் என்பிஆர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் போட்டி தொடர்பாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் கேப்டன் பாபா அபாரஜித் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டன் சாய் சுதர்சன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா உடனான தனது முதல் குறித்து சாய் சுதர்சன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர்," டி.என்.பி.எல். கிரிக்கெட் நிறைய வீரர்களை உருவாக்கி இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் வீரர்கள் திறமையை வெளிப்படுத்துவது அவசியம். எனவே முழுமனதோடு விளையாடும் போது ஆக்ரோஷத்தை தவிர்க்க முடியாது. அதுவும் விளையாட்டின் ஒரு பகுதியே. அன்றும் அப்படித்தான் நடந்தது. பாண்ட்யா என் நல்ல நண்பர். அது களத்துடன் முடிந்து விட்டது. மீண்டும் பல முறை நாங்கள் பேசினோம்.
டிஎன்பிஎல்லில் எங்கள் அணி நன்றாக அமைந்து இருக்கிறது. திறமையான வீரர்கள் பலர் இருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த அணியுடன் களத்தில் இறங்குகிறோம். பந்து வீச்சில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக முழு திறமையையும் பயன்படுத்துகிறேன். அதேபோல் ரன்களை குவிப்பது அவசியம். இதற்காக கடந்த 2 ஆட்டங்களில் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். இனிவரும் ஆட்டங்களில் எங்கள் அணி இன்னும் சிறப்பாக விளையாடும். அதற்காக நன்றாக தயாராகி இருக்கிறோம்" என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications