தானம் செய்வதற்காகவே சம்பாதிக்கும் சைதை துரைசாமி! 1984லேயே இலவசமாக டைப் ரைட்டிங், ஜெராக்ஸ்!
சென்னை: தனது ஒரே ஆருயிர் மகன் வெற்றியை இயற்கையிடம் பறிகொடுத்து விட்டு நிர்கதியாக கலங்கி நிற்கிறார் சைதை துரைசாமி. கரூரை பூர்விகமாக கொண்ட இவர் சென்னையில் செட்டிலாகி 40 ஆண்டுகளை கடந்துவிட்டது.
அடுப்பில் உலையை வைத்துவிட்டு அரிசிக்கு பணம் வாங்கி விடலாம் என்று நம்பிக்கையோடு சைதை துரைசாமியை பார்க்கச் செல்லலாம் என அவரை பற்றி நன்கறிந்தவர்கள் கூறுவது உண்டு. அந்தளவுக்கு தான தர்மங்களில் அதீத ஈடுபாடு காட்டுபவர் சைதை துரைசாமி. அப்படிப்பட்டவருக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என அவரை அறிந்தவர்கள் மட்டுமின்றி அவரை பற்றி கேள்விபட்டவர்களும் ஆதங்கப்படும் நிலையை காண முடிகிறது.

1984ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக சைதை துரைசாமி வெற்றிபெற்றதும், தனது தொகுதி மக்கள் அனைவருக்கும் இலவசமாக டைப் ரைட்டிங், இலவசமாக ஜெராக்ஸ் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுவரை எந்த சட்டமன்ற உறுப்பினரும் செய்யாத காரியம் இது. அதேபோல் தனிப்பட்ட முறையிலும் தன்னை நாடி வருவோருக்கு அவர்களின் தேவையறிந்து உதவும் எண்ணவோட்டம் கொண்டவர்.
சென்னை வேளச்சேரி பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ள சைதை துரைசாமி ஏழை எளிய மக்கள் இலவசமாக தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதி அளித்து வருகிறார். அவர்களிடம் 1ரூபாய் கூட வாடகை வாங்குவதில்லை. எம்.ஜி.ஆரின். பக்தர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அவர் மீது மட்டட்ற்ற மதிப்பு மரியாதை வைத்திருப்பதாலோ என்னவோ அவர் வழிமுறையை அப்படியே பின்பற்றி வருகிறார் சைதை துரைசாமி.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டத்தை, தனது மனித நேய அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். அதுமட்டுமல்ல எல்லாவற்றுக்கும் மேலாக தனது பயிற்சி மையத்தில் படிக்கும் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு இலவச தங்குமிடம், சாப்பாடு, புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அறக்கட்டளை மூலம் செய்து கொடுக்கிறார் சைதை துரைசாமி.
இதில் குறிப்பிட்ட வேண்டிய விவகாரம் என்னவென்றால், உயிரோடு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உதவாமால் இறந்தவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், இலவச அமரர் ஊர்தி சேவையையும், இறந்தவர் உடலை பாதுகாக்கும் 10 ப்ரீசர் பாக்ஸ்களை இலவச சேவையாகவும் தனது அறக்கட்டளை மூலம் சைதை துரைசாமி வழங்கி வருவது தான்.
இப்படி சைதை துரைசாமியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சொல்லிக்கொண்டே போகலாம். தனது ஒரே மகன் வெற்றியை மரணம் தழுவிக்கொண்ட சூழலிலும் நிலை குலையாமல் நேற்றைய தினம் அவர் அளித்த பேட்டி முக்கியமானது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களையும் அரசின் உயர் பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்பதை தனது மகனின் மரணத்தில் உறுதியேற்பதாக சூளுரைத்துள்ளார்.
1984ல் சட்டமன்ற உறுப்பினரானதற்கு பின்னர் 2011-2016 காலக்கட்டத்தில் சைதை துரைசாமி சென்னை மாநகர மேயராக இருந்தார். அதன் பிறகு 2016ஆம் ஆண்டு முதலே தீவிர அரசியலில் இருந்து சைதை துரைசாமி மெல்ல ஒதுங்கிக்கொண்டார். இப்போது முழு நேரமாக தனது அறக்கட்டளை பணிகளை மட்டுமே கவனித்து வருகிறார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications