சாய்னா மட்டும்தானா? அப்போ சமந்தா? வசமாக சிக்கிய சித்தார்த்.. தோண்டப்படும் பழைய ரெக்கார்ட்ஸ்!
சென்னை: சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு இருந்தாலும் இதற்கு முன் செய்த சில சர்ச்சைக்குரிய ட்விட்டுகளால் நடிகர் சித்தார்த் தற்போது சிக்கலில் மாட்டி இருக்கிறார்.
Recommended Video
பஞ்சாப்பில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் கான்வாய் முடக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் அந்த நாட்டை எப்படி பாதுகாப்பான நாடு என்று சொல்ல முடியும்.
பிரதமர் மீது தாக்குதல் நடத்தியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். சாய்னாவின் இந்த ட்விட்டை ஷேர் செய்து நடிகர் சித்தார் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்தது சர்ச்சையானது.

சர்ச்சை என்ன?
சாய்னா நேவாலின் இந்த ட்விட்டை ரீ ட்விட் செய்த சித்தார்த் இரட்டை அர்த்தம் வரும்படி கிண்டல் செய்து இருந்தார். மோசமான கருத்தில் இரட்டை அர்த்தத்துடன் சாய்னாவை சித்தார்த் கிண்டல் செய்து இருந்தார். இது தேசிய அளவில் பெரிய சர்ச்சையானது. பல தரப்பில் இருந்தும் சித்தார்த்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நேற்று தான் தெரிவித்த கருத்துக்கு சித்தார்த் மன்னிப்பு கோரினார். நான் தவறாக பகிர்ந்த ஜோக்கிற்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.

மன்னிப்பு
நாம் கருத்து ரீதியாக வேறுபட்டு இருக்கலாம். ஆனால் தவறான அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். அதற்காக நான் கூறிய வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. சரியான கருத்தை பேசாத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன். எந்த தரக்குறைவான எண்ணத்தோடும் நான் பேசவில்லை. நாம் இந்த பிரச்னையை முடித்து கடந்து செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதுமே என்னுடைய சாம்பியன் தான் என்று சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டு சித்தார்த் போஸ்ட் செய்து இருந்தார்.

மன்னிப்பு கோரினாலும் சிக்கல்
ஆனால் இந்த விவகாரத்தில் சித்தார்த் மன்னிப்பு கோரினாலும் அவருக்கு இன்னும் சிக்கல் நீடிப்பதாகவே தகவல்கள் வருகின்றன. அதன்படி இந்திய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகுகிறது. சித்தார்த் வேண்டுமென்றால் மன்னிப்பு கேட்டு இருக்கலாம். ஆனால் அவர் பேசிய கருத்து தவறானது. அவர் இப்படி பேசுவது முதல்முறை கிடையாது.. இதற்கு முன்பே பல முறை பேசி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று இந்திய மகளிர் ஆணையம் கருதுவதாக தகவல்கள் வருகின்றன.

ஆணையம் குறிக்கோள்
இதற்கு முன்பே முன்னணி செய்தியாளர் ஒருவர் பற்றி சித்தார்த் இப்படி குறிப்பிட்டு இருந்தார். அதோடு முன்னணி நடிகை சமந்தா விவகாரத்து செய்த போதும் சித்தார்த் அதை விமர்சனம் செய்து பேசி இருந்தார். சமந்தா - சித்தார்த் முன்பு காதலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது போக அரசியல் தொடர்பான விஷயங்களில் சில பெண் அரசியல் தலைவர்களையும் சித்தார்த் கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது. இதை எல்லாம் மொத்தமாக திரட்டி சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தில் இந்திய மகளிர் ஆணையம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

முடக்க வேண்டும்
முதல் கட்டமாக அவரின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்ற திட்டத்தில் இந்திய மகளிர் ஆணையம் உள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி புகார் அளித்த இந்திய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா.. சித்தார்த் இதற்கு முன்பே பெண்களை பற்றி தவறாக பேசி இருக்கிறார். அவர் இதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட வேண்டும். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.

வழக்கு பாயும் வாய்ப்பு
அதாவது சாய்னா விவகாரத்தில் சித்தார்த் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் மற்ற பெண்களை கிண்டலாக பேசியது தொடர்பாக சித்தார்த் மீது நடவடிக்கை பாயும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்திய மகளிர் ஆணையம் ஏற்கனவே சித்தார்த்துக்கு எதிராக தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளது. இவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கோரிக்கை வைத்துள்ளது.

பாஜக மோதல்
தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக இவர் தீவிரமாக கருத்துக்களை தெரிவித்து வந்தவர் என்பதால் பாஜகவினர் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்து டிரெண்ட் செய்து வருகிறார்கள். சித்தார்த்தை விட கூடாது.. அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது பெண்ணுக்கு எதிரான விஷயம், ஒரு விளையாட்டு பிரபலத்திற்கு எதிரான விஷயம் என்பதால் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் ஒதுங்கிக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கை
அமைச்சர்கள், விளையாட்டு துறையினர் என்று பல பக்கங்களில் இருந்து வந்த எதிர்ப்பால் தற்போது சித்தார்த் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் இதற்கு முன் தான் தெரிவித்த கருத்துக்களுக்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையத்தில் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்திய மகளிர் ஆணையம் இதில் தனியாக வழக்கு தொடுத்து விசாரணை நடத்தும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் பழைய ட்விட்கள் தொகுக்கப்பட்டு மொத்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications