தமிழகத்தில் ரேஷன் கடைக்கே செல்ல வேண்டாம்! விரைவில் டோர் டெலிவரி! அமைச்சர் முக்கிய அப்டேட்
சென்னை: ரேஷன் பொருட்கள் விரைவில் டோர் டெலிவரி செய்யப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இயங்கி வரும் 48 சூப்பர் மார்க்கெட்டுகள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படலாம் என தெரிகிறது.
தமிழகத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. சுமார் 9,900 கடைகள் பகுதி நேரமாகவும் மீதமுள்ள கடைகள் முழு நேர கடைகளாகவும் இயங்கி வருகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் அரசு அனுமதித்த பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். பிற பொருட்களை விற்கவே கூடாது. அதை வாங்குமாறு நுகர்வோரை கட்டாயப்படுத்தவும் கூடாது.
ரேஷன் கடைகள் மூலம் வீட்டிற்கே பொருட்களை வழங்குவதில் சிரமம் இருக்கிறது. 2.23 கோடி பேர் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளன. அவர்களது வீடுகளே சென்று பொருட்களை வழங்குவது தொடர்பாக பரிசீலனை செய்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் உடல் ரீதியாக சிரமப்படுபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கொண்டு போய் கொடுக்கப்படுகின்றன.
ரேஷன் கடை மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அது போல் பொங்கல் பரிசும் இந்த ரேஷன் கடைகள் மூலமே வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களை வீடு வீடாக கொண்டு போய் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி விதிக்காவிட்டால் விரைவில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு வீடாக டோர் டெலிவரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டோர் டெலிவரி செய்ய பொருட்களை பாக்கெட்டுகளாக மாற்ற வேண்டும். இதனால் பொருட்கள் வீணாகாமல் மக்களுக்கு சரியான அளவில் கிடைக்கும். இதற்காக 6 மில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது போன்று டோர் டெலிவரி திட்டம் கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த நிலையில் தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு தீவிரம் காட்டியது. அதன் படி ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் நடைமுறைக்காக டோக்கன் வழங்கப்பட்டது. அந்த டோக்கனை வைத்து ரேஷன்பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
கொரோனா தொற்று நோய் என அறிவிக்கப்பட்டதால் நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக வழங்கப்பட்டது. அந்த டோக்கனில் பொருட்கள் வழங்கப்படும் நாள், நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருளை வழங்கும் திட்டத்தை முதலில் முழங்கியவர் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். எனவே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்பட்டால் அவருடைய கனவு நனவாகும்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications