டிரைவர், கண்டக்டர்களுக்கு ஊதியம் அதிரடியாக உயர்வு.. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் குட்நியூஸ்
சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர் பற்றாக்குறையை போக்க நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்ப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழகங்களில் பணியாற்றுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

பணியாளர்கள் ஓய்வு பெறும் போது, புதிய பணியாளர்கள் தேர்வு செய்வதற்கான இடைவெளியில் பேருந்துகள் ஓட்ட ஆள் இல்லாத நிலை ஏற்படுவதால், தற்காலிக நடவடிக்கையாக ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக ஒரு முறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர் பற்றாக்குறையை போக்க தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ,535 மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக 882 ஊதியமாக வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக இயக்கப் பிரிவு பொதுமேலாளர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: "கடந்த 9-ம் தேதி நடைபெற்ற வாரிய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலும், கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தொழிலாளர் நலத்துறை பிறப்பித்த அரசாணையின்படியும் டிரைவர், கண்டக்டர் பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டி.சி.சி. பணியாளர்களுக்கும், தொழில்நுட்ப பணியாளர்களுக்குமான குறைந்தபட்ச ஊதியத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி நாளொன்றுக்கு டி.சி.சி. பணியாளர்களுக்கு ரூ,882-ம், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ,872-ம் ஊதியமாக வழங்கப்பட வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் ஊதியம் தினக்கூலி ஊழியர்களுக்கு கணிசமாக உயரப்போகிறது. இந்த உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். அதேநேரம் நிரந்தர பணியாளர்களை நியமிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications