விற்பனை பத்திரம், பட்டா பெற சூப்பர் சான்ஸ்.. ஆவண நகல் ரெடி? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை பாருங்க
சென்னை: வீட்டு வசதி வாரியத்திடமிருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், சென்னையில் 3 நாள் முகாம் நடைபெற்று வருகிறது.. இதில் இன்று கடைசி நாள் முகாம் என்பதால், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டு வசதி வாரியமும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெறுவதற்கு வசதியாக, வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், விற்பனை பத்திரங்கள் உட்பட ஆவணங்களை ஒப்படைத்து, பட்டா பெற்றுக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டும் வருகிறது.

விற்பனை பத்திரம்
அந்தவகையில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 2 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகரம், மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள பகுதி-1, பகுதி-2 மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றால் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவ்வாறு ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையையும் செலுத்திய ஒதுக்கீடுதாரர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டா பெற சிறப்பு முகாம்
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மேலான உத்தரவுக்கு இணங்க மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்களுக்கு வருவாய் துறையிடமிருந்து நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒதுக்கீடுதாரர்கள் இச்சிறப்பு முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடமிருந்து மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடமிருந்து வாங்கிய சொத்துக்கு நில உரிமை ஆவணம் (பட்டா) பெறுவதற்கு ஏதுவாக தாங்கள் விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் வருவாய் துறை சார்பாக சிறுவர் மாநகராட்சி பூங்கா, மணலி பகுதி-2ல் மார்ச் 19,20 மற்றும் 21 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 வரையில் நடத்தப்படும் சிறப்பு முகாமில் ஆவணங்களின் நகலினை ஒப்படைத்து பட்டா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இன்று கடைசி நாள் முகாம்
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ஒதுக்கீடுதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏற்கெனவே மேற்காணும் திட்டப்பகுதியில் பட்டா பெறுவதற்கு ஏற்கனவே விண்ணப்பம் அளித்திருந்தால் மீண்டும் விண்ணப்பம் அளிக்க வேண்டாம்" என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அந்தவகையில், நேற்றும், நேற்று முன்தினமும் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளாக 21ம் தேதி முகாம் நடைபெற உள்ளது.. எனவே, மணலி புதுநகர் திட்டப்பகுதியில் உள்ள ஒதுக்கீடுதாரர்கள், வருவாய் துறையிடமிருந்து பட்டாக்களை இன்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. .
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications