சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு பதில் என்ன? காங்கிரஸ் கொடுத்த பரபர விளக்கம்
சென்னை: சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு 'இந்தியா' கூட்டணி அமைதி காப்பது ஏன் என்ற கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் பதிலளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் அவர் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் என்பது டெங்கு, மலேரியா போன்றது. சனாதன தர்மத்தை ஏதிர்க்கக் கூடாது; ஒழித்தாக வேண்டும் என திராவிடர் இயக்க கொள்கையை வலியுறுத்தி பேசினார். ஆனால் நாடு முழுவதும் பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக திரித்து பொய் செய்தி பரப்பினர்.

இதனடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அமைச்சர் உதயநிதியை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அமைச்சர் உதயநிதியோ, தாம் சனாதன தர்மத்தைதான் எதிர்க்கிறேன்; காங்கிரஸ் ஒழிக என பிரதமர் மோடி பேசுகிறார்..
அப்படியானால் காங்கிரஸ் கட்சியினரை படுகொலை செய்ய மோடி சொல்வதாக எடுத்துக் கொள்ளலாமா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான் திமுகவின் கொள்கை என திட்டவட்டமாக கூறியிருந்தார். இருந்த போதும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக போராட்டம், போலீசில் புகார் என வட இந்திய பாஜகவினர் செயல்பட்டு வருகின்றனர்.
அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சு நேற்று முதலே தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலிடம், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு 'இந்தியா' கூட்டணி அமைதி காப்பது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கே.சி வேணுகோபால், சமதர்ம சமுதாயம் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
கருத்து சொல்ல ஒவ்வொரு கட்சிக்கும் சுதந்திரம் உண்டு. அனைவரது நம்பிக்கையையும் மதிக்கிறோம்" என்றார். அதேபோல், கர்நாடக அமைச்சரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமனா பிரியங்க் கார்கேவிடம் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரியங்க் கார்கே, சமத்துவத்தையோ அல்லது மனித சமூகத்திற்கான கண்ணியத்தை ஊக்கப்படுத்தாத எந்த ஒருமதமும் மதமே கிடையாது என்பது எனது கருத்து. அனைவருக்கும் சம உரிமை கொடுக்காத அல்லது மனிதர்களை போல் நடத்தாத எந்த ஒரு மதமும் நோய் போன்றதுதான்" என கூறினார்.












Click it and Unblock the Notifications