ஒரே பதிவெண்ணில் ஆம்னி பஸ்கள்? வரி செலுத்தாத பேருந்துகள் சிறைபிடிப்பு.. விழித்த ஓனர்கள்.. தவித்த ஜனம்
சென்னை: சோதனையின்போது வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் எல்லாம் ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது..
பொங்கல் பண்டிகை, புத்தாண்டு, ஆயுதபூஜை, தீபாவளி போன்ற பண்டிகை விடுமுறை நாட்களில், ஆம்னி பஸ்களில் கட்டணங்கள் 3 மடங்காக அதிகரித்து விடுவது வாடிக்கையாகும்.. எனவே, பண்டிகை நாட்களில் ஆம்னி பஸ்களின் கட்டணத்தை கண்டு கலங்கும் பொதுமக்கள், அரசுக்கு இது தொடர்பான கோரிக்கையை விடுப்பதும் இயல்பாகிவிட்டது.

இதையடுத்து, விதிமுறைகளை மீறக்கூடாது, அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று, தமிழக அரசு ஒவ்வொருமுறையும் எச்சரித்தபடியே வந்தாலும், கட்டண கொள்ளை என்பது அதிகரித்தபடியே உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம், நீதிமன்றத்திலும் ஆம்னி பஸ்கள் தொடர்பான வழக்குகள் நடந்து வந்தநிலையில், நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை அப்போது பிறப்பித்திருந்தார்கள்..
விதிமுறைகள்: அதில், "விதிமுறைகளை மீறும் ஆம்னி பஸ்களுக்கு வெறும் அபராதம் விதிப்பதால் மட்டும் தீர்வு ஏற்படப் போவதில்லை.. தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என கண்காணிக்க அடிக்கடி சோதனைகள் நடத்த வேண்டும். தொடர் குற்றத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளதால், உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து, போக்குவரத்துத் துறையினர், தமிழகம் முழுவதும், ஆம்னி பஸ்களில் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி, விதிகளை மீறும் பஸ்களையும் சிறைபிடித்து, பிடிபட்ட பஸ்களுக்கும் அபராதமும் விதிக்கிறார்கள். அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்புகூட, தமிழகம் முழுவதும் 15,659 ஆம்னி பஸ்களில் சோதனை செய்யப்பட்டதில் 1,892 பேருந்துகளில் கட்டணம் வசூல் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், ரூ. 36.55 லட்சம் வசூலித்திருந்தது.
வரி நிலுவை: இந்நிலையில், தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வரும் நிலையில், சோதனையின்போது வரி நிலுவை உள்ள ஆம்னி பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என்று போக்குவரத்து துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இதனால் பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்படும் சூழலும் எழுந்துள்ளதாம்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் சொல்லும்போது, "போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதிக கட்டணம் வசூல்: அப்போது தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படாது என உரிமையாளர்கள் உத்தரவாதம் தந்தார்கள். இது தொடர்பாக பயணச்சீட்டுக்கான ஆன்லைன் முன்பதிவு செயலிகளுக்கும் அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், அதிக கட்டணம் தொடர்பாக புகார்கள் வருகின்றன. அப்படி பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட அதிக தொகையை திருப்பி செலுத்த அறிவுறுத்தி வருகிறோம்.
அதேபோல் வெளி மாநில பேருந்துகள் தமிழக அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது. அதனால் போக்குவரத்து துறை அதிகாரிகளால் பேருந்து நிலையங்களிலும், வழித்தடத்திலும் மேற்கொள்ளப்படும் சோதனையின்போது, வரி பேருந்துகளுக்கு செலுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பஸ்கள் சிறைபிடிக்கப்படும்.
பயணிகள்: அதனால், பயணிகள் தாங்கள் பயணிக்க இருக்கும் பஸ்ஸின் உரிமம், வரி, தகுதிச்சான்று போன்றவை சரியாக இருக்கிறதா என நிர்வாக தரப்பினரிடம் உறுதி செய்ய வேண்டும். சில பஸ்களில், சென்று சேருமிடத்துக்கான கட்டணமே, வழியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றனர்.
தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாமல் அஸ்ஸாம் வரையிலான வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
புகார்கள்: அரசின் உத்தரவை மதிக்காமல் பல்வேறு ஆம்னி பேருந்துகள் பழைய பதிவெண்களிலேயே இயக்கப்படுகிறதாம். வெளிமாநில பதிவெண் விவகாரமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ஒரே பதிவெண்களில் 4 பஸ்களை ஆம்னி இயக்கியிருப்பதாக சமீபத்தில் புகார்கள் வெடித்து குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆம்னி பேருந்துகளில் வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பும் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கொடிசியாவிலிருந்து மட்டுமே இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications