சாம்சங் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது.. தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது தமிழ்நாடு அரசு.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியில் சாம்சங் தனியார் ஆலை செயல்படுகிறது. அங்கு பணியாற்றும் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஊதிய உயர்வு, தொழிற் சங்கத்துக்கு அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 நாட்களுக்கு மேலாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் முன்னின்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல கட்ட பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த அக்டோபர் 14-ம் தேதி வழக்கம் போல சாம்சங் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். பின்னர் தொழிற்சங்கத்தை ஆலையில் அங்கீகரித்து பதிவு செய்யாதது குறித்து சி.ஐ.டி.யு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தொழிற்சங்க பதிவு குறித்து தமிழக அரசும், பதிவு துறையும் முடிவெடுக்க ஆறு வாரம் கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்த நிலையில், ஆறு வார கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளது தமிழ்நாடு அரசு.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications