Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிமட்ட ஊதியம்.. போராட்டத்திற்கு பிறகு ரூ.9,000 சம்பள உயர்வை அறிவித்தது சாம்சங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில், கடந்த சில ஆண்டுகளாக தாங்கள் குறைந்த சம்பளத்திற்கு வேலை வாங்கப்பட்டு வந்ததாக கூறி தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கத்தின் கீழ் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்குவதாக நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு இந்நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் தொடங்கப்பட்டது. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம், பணி பாதுகாப்பு இல்லாதது உள்ளிட்ட சிக்கல்கள் இருந்தன. இது பற்றி கேள்வி எழுப்புவோர்கள் பணி நீக்கம் உள்ளிட்ட சிக்கலையும் எதிர்கொண்டனர். இந்நிலையில்தான் இந்த தொழிற்சாலையில் சிஐடியு சங்கம் அமைத்தது.

Samsung CITU Tamil Nadu Sriperumbudur

சங்கம் அமைப்பதற்கு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய சிஐடியு, ஊழியர்களின் ஊதிய விஷயத்திலும் விட்டுக்கொடுக்காமல் சண்டை செய்தது. இது தொடர்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தற்போது தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. அதன்படி, இனி அடுத்த 3 ஆண்டுகளுக்கு, வருடத்திற்கு தலா ரூ.9,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சாம்சங் நிர்வாகம் கூறியிருக்கிறது. இதனையடுத்து நிறுவனத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் இடையேயான பஞ்சாயத்து முடிந்திருக்கிறது.

பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தென்கொரியா நாட்டை சேர்ந்த சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ஏ சி டிவி, வாஷிங் மெஷின்கள், குளிர்சாதன பெட்டி மற்றும் கம்பிரசர்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது.

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் நிர்வாகத்திற்கு எதிராக ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நிலுவையில் இருக்கும்போதே 09.09.2024-ல் வேலை நிறுத்தம் செய்தது. வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்ள அமைச்சர் பெருமக்களால் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் 15.10.2024 தேதியிட்ட ஏற்புடைய அறிவுரையில் தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நிர்வாகம். 08.01.2025 தேதியில் தாக்கல் செய்த பதிலுரையில் மூன்று ஆண்டு காலங்களுக்கு ரூ.9000/- ஊதிய உயர்வு வழங்கிட பரிசீலனை செய்வதாக தெரிவித்தது.

இதே காலத்தில் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் ஒரு பிரிவு தொழிலாளர்கள் நிர்வாகத்தை அணுகி தங்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை அளிக்க கோரினர் நிர்வாகம், கோரிக்கைகளை பரிசீலனை செய்து 01:04 2025 முதல் 31.03.2028 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு மற்றும் இதர பலன்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பலன்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவதாகவும் நிர்வாகம் தெரிவித்தது.

நிர்வாகம் ஊதிய உயர்வு மற்றும் இதர பலன்களை மற்ற தொழிலாளர்களுக்கும் வழங்கிட தெரிவித்துள்ள நிலையில் அதனை மனுதாரர் தொழிற்சங்கம் ஏற்பது தொடர்பாக சமரச அலுவலர் முன்பு பல தேதிகளில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது.

இன்று (19.05.2025) சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் திருப்பெரும்புதூர். தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-1 முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகத் தரப்பில் கண்ணன், இயக்குநர் (மக்கள் தொடர்பு ). ஆர். மேரி பிளாரன்ஸ் யாசினி, குழுத் தலைவர் (மனிதவளம்), பார்த்திபன். பொது மேலாளர் (மனிதவளம்), தண்டாயுதபாணி, சட்ட ஆலோசகர் மற்றும் சதீஷ். மேலாளர் ஆகியோரும், தொழிற்சங்கத் தரப்பில் அ.சவுந்தரராசன், கௌரத் தலைவர். E.முத்துக்குமார் தலைவர், மாதேசு, பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இருதரப்புக்கும் கீழ்க்கண்டவாறு ஏற்புடைய அறிவுரை வழங்கப்படுகிறது.

1. 01.04.2025 முதல் 31.03.2028 வரையிலான ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு மற்றும் இதர பலன்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்ததை தொழிற்சங்கத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.

2. தொழிலாளர்கள் தொழிலாளர் நலச் சட்டங்கள் / சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளுக்கு உட்பட்டு தங்களது முழு ஒத்துழைப்பை நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் OTOOT தொழிற்சங்கத்திற்கும். தொழிலாளர் நலச் சட்டங்கள் / சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது. இதனை இருதரப்பும் ஏற்றுக்கொண்டனர்.

3. தொழிற்சங்கம் இனி வரும் காலங்களில் தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு முரணான உள்ளிருப்பு போராட்டம், வேலை நிறுத்தம் போன்ற நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கூடத்தின் வழியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் தொழிற்சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

4. தொழிற்சங்கத்தால் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர் துறை முன்பு எழுப்பியுள்ள ஊதிய உயர்வு கோரிக்கை மற்றும் வேலைநிறுத்தம் தொழிற்தாவா (ந.க.எண்.ஆ/710/2024) வலியுறுத்தும் செய்யப்படாமல் திரும்ப பெற்றுக்கொள்வதாக தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டது. இதர தாவாக்கள் மற்றும் புகார் மீது இருதரப்பாகவோ / முத்தரப்பாகவோ

பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் அல்லது சட்டப்படியான வழிகளில் தீர்வு காணலாம் என இருதரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டது.

5. நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் பலன்களை பெற்று கொள்ளும் நிலையில் 01.04.2025 முதல் 31.03.2028 வரையிலான காலங்களில் நிர்வாகத்திற்கு கூடுதல் நிதி சுமையை ஏற்படுத்தும் எந்த கோரிக்கையும் எழுப்பக் கூடாது 6T601 நிர்வாகம் தெரிவித்ததைத் தொழிற்சங்கம் ஒப்புக்கொண்டது. நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வரும் பலன்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

மேற்படி ஷரத்துக்கள் அடங்கிய ஏற்புடைய அறிவுரை இன்று (19.05.2025) இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு என் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது"என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+