செல்போனில் ‘சஞ்சார் சாத்தி’ கட்டாயமா? உளவு பார்க்கும் “பிக் பிரதர்”.. என்ன தான் பிரச்சினை அதில்?
சென்னை: புதிய ஸ்மார்ட்போன்களில் 'சஞ்சார் சாத்தி' செயலியை கட்டாயமாக நிறுவ வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சைபர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு விளக்கமளித்தாலும், நாடாளுமன்றத்திலிருந்து செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் வரை பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்த செயலியில் என்ன? உள்ளது. எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து பார்க்கலாம்..
மத்திய தொலைதொடர்பு துறை உருவாக்கியுள்ள சஞ்சார் சாத்தி செயலி, பயனர்களின் டிஜிட்டல் அடையாளங்களை நிர்வகிப்பதோடு, போலி அழைப்புகள், மோசடி செய்தி, சந்தேகமான வாட்ஸ்அப் மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை புகாரளிக்க உதவுகிறது.

இதற்கான தனிப்பட்ட சேவையாக சக்ஸு (Chaksu) என்னும் வசதியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையற்ற வணிக அழைப்புகள் குறித்து புகார் செய்யவும், ஒருவர் பெயரில் யாரோ எடுத்திருக்கும் கூடுதல் மொபைல் இணைப்புகளை கண்டறியவும், திருடுபோன அல்லது தொலைந்த செல்போன்களின் IMEI எண்ணை முடக்கவும் இச்செயலி உதவுகிறது.
சஞ்சார் சாத்தி சர்ச்சை
பயனர் வசிக்கும் பகுதியில் உள்ள இணைய சேவை வழங்குநரை அறிந்து கொள்வதற்கான வசதியுடன், வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் உண்மையான கஸ்டமர் கேர் எண்களை அறியவும் இது உதவுகிறது. 120 கோடி மொபைல் பயனர்கள் உள்ள நாடான இந்தியாவில், திருட்டு போன்கள் மற்றும் சைபர் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 7 லட்சம் தொலைந்த போன்களை இந்த செயலியின் உதவியால் கண்டறிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிள் எதிர்ப்பு
இத்தகைய பல நன்மைகளை அரசாங்கம் பட்டியலிட்டாலும், சஞ்சார் சாத்தி செயலியை ஸ்மார்ட்போன்களில் முன்கூட்டியே நிறுவ வேண்டும் என்ற உத்தரவு பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவனம், பயனர்களின் தனியுரிமை தனது கொள்கை என்பதால், அரசு உருவாக்கிய செயலியை கூட கட்டாயமாக தனது டிவைஸ்களில் சேர்க்க முடியாது என தெரிவித்துள்ளது. மற்ற செல்போன் நிறுவனங்களும் அதே போல் கவலை தெரிவித்துள்ளது.
தனியுரிமை விவாதம்
இதுதொடர்பாக பேசியுள்ள டெக் உலகைச் சேர்ந்த தனியுரிமை ஆர்வலர்கள், இந்த செயலி முன்கூட்டியே நிறுவப்படும் பட்சத்தில், பயனர்கள் தகவல் எவ்வாறு கையாளப்படும் என்ற சந்தேகம் எழுகிறது; தனிநபர் சுதந்திரத்திற்கு இது நேரடி தலையீடாகும் என்றும் வலியுறுத்துகின்றனர். இந்த செயலி மூலம் அரசு பயனர்களை கண்காணிக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள், இது 'உளவு கண்காணிப்பு முயற்சி' என குற்றம் சாட்டி விவாதம் கோரி ஒத்திவைப்பு தீர்மானமும் கொண்டு வந்தனர்.
நாடாளுமன்ற விவாதம்
கே.சி. வேணுகோபால் "பிக் பிரதர் நம்மை கண்காணிக்க முடியாது" என்று பதிவு செய்ததும் இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சஞ்சார் சாத்தி மீது எழும் சந்தேகங்களுக்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, "செயலியை பதிவிறக்கம் செய்வது பயனரின் விருப்பம். புதிய ஸ்மார்ட்போன்களில் செயலி முன்கூட்டியே இருக்கும். அதை வைத்துக் கொள்ள வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது முழுக்க பயனரின் தீர்மானம். அரசு இந்த செயலியை ஒரு பாதுகாப்பு முறையாக மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications