பனையூர் டூ பட்டினப்பாக்கம்.. புயலை கொண்டு வந்த சங்கீதா.. கேசுரீனா டிரைவ் பக்கமே போகாத விஜய்!
சென்னை: சினிமா கிளைமேக்ஸ் காட்சிகளை விடவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக வெற்றி கழகத்தின் உள்கட்சி விவகாரங்கள். "2026-ல் கோட்டை நமக்குத்தான்!" என முழக்கமிட்ட நிர்வாகிகள், இப்போது பனையூர் வீட்டின் கேட் எப்போது திறக்கும் என வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்.

பனையூர் வீசிய புயல்... பட்டினப்பாக்கத்தில் அமைதி!
சமீபகாலமாக விஜய் - சங்கீதா விவாகரத்து தொடர்பான புகார்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பியுள்ளன. இதுநாள் வரை மௌனமாகவே எதையும் கடந்து வந்த விஜய், இம்முறை சற்று ஆழமாகவே பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
வழக்கமாக கட்சிக் கூட்டங்களும், முக்கிய ஆலோசனைகளும் நடைபெறும் பனையூர் இல்லம் இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது. அங்கிருந்த தனது முகாம் அலுவலகத்தை அப்படியே மூடிவிட்டு, பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இரண்டாவது இல்லத்திற்கு விஜய் இடம்பெயர்ந்துவிட்டதாகத் தகவல்கள் கசிகின்றன.
நெருங்கிய வட்டாரங்களுக்குத் தடை: விஜய்யின் நிழலாக வலம் வரும் மிக நெருக்கமான 'அப்டேட்' பிரமுகர்களுக்குக் கூட இந்த முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போன் கால்களுக்கு நோ: கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்க வேண்டாம் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார்.
"என்ன நடக்குதுனே தெரியலையே?" - தத்தளிக்கும் நிர்வாகிகள்!
கட்சி ஆரம்பித்து தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அடுத்தகட்ட நகர்வை நோக்கி நகர வேண்டிய நேரத்தில், தலைவரின் இந்த திடீர் 'மௌன விரதம்' நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"மாநாடு முடிந்து அடுத்தகட்டமாக பூத் கமிட்டி, உறுப்பினர் சேர்க்கை என வேகம் எடுக்க வேண்டிய நேரத்தில், அண்ணன் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது எங்களுக்குப் பேரிடியாக இருக்கிறது. தனிப்பட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருந்தாலும், அரசியலில் முகம் காட்டாமல் இருந்தால் மக்கள் மறந்துவிடுவார்களே என்ற பயம் இருக்கிறது," என்கிறார் விஜய்க்கு நெருக்கமான ஒரு முக்கிய நிர்வாகி.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தற்போது கடும் குழப்பத்தில் உள்ளனர். திட்டமிடப்பட்ட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், எந்தவித வழிகாட்டுதலும் இல்லாததாலும் கட்சியின் களப்பணிகள் முடங்கியுள்ளன.
விஜய்யின் மனநிலை என்ன?
இன்னொரு பக்கம் இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக அணுகி வருகிறதாம் கட்சித் தலைமை. சங்கீதா தரப்பில் இருந்து எந்தவிதமான அதிருப்தி அறிக்கைகளும் வராதபடி, "பேச்சுவார்த்தை" நடத்தி சமாதானப்படுத்த ஒரு தனி குழுவே செயல்பட்டு வருவதாகக் கோட்டை வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
"அரசியல் களத்தில் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் குடும்பத்திற்குள் எழும் விமர்சனம் ஒரு தலைவனின் இமேஜை மொத்தமாகச் சிதைத்துவிடும்" என்பதுதான் இப்போதைய தவெக-வின் கவலை. தேவையின்றி இதற்கு திமுகதான் காரணம் என்று பழியை போட்டாலும் அதற்கும் சங்கீதா கோபம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால் விஜய் இப்போது ஒருவித 'தனிமை'யை விரும்புவதாக அவரது நண்பர்கள் தரப்பில் கூறப்படுகிறது. தனது தனிப்பட்ட வாழ்வின் சலசலப்புகள் கட்சியின் பிம்பத்தைப் பாதித்துவிடக் கூடாது என்ற அக்கறையா அல்லது இந்த விமர்சனங்களால் ஏற்பட்ட மன உளைச்சலா என்பது அவருக்கும், அவர் இருக்கும் அந்த பட்டினப்பாக்கம் சுவர்களுக்குமே வெளிச்சம்.
இருப்பினும், அரசியலில் வெற்றி என்பது 'தொடர் ஓட்டம்' போன்றது. இடையில் தங்குவது பின்னால் வரும் எதிரிகளுக்குக் கூடுதல் பலத்தைத் தரும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்து.
அடுத்த மூவ் என்ன?
விஜய் விரைவில் கேமரா முன்போ அல்லது மக்கள் முன்போ தோன்றி இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? அல்லது இந்த அமைதி இன்னும் சில காலம் நீடிக்குமா?
-
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications