சங்கீதா விவகாரத்து வழக்கு: திடீர் திருப்பமாக ஜூன் 15ல் விசாரணை! பிரசாரத்திற்கு கிளம்பிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யிடம் விவகாரத்து கோரி மனைவி சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் திடீர் திருப்பமாக விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இருவரும் ஆஜர் ஆகாததால், வழக்கினை வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, இருவரும் அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்த விஜய், வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதால் தேர்தல் பிரசாரத்திற்கு நிம்மதியாக கிளம்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நடிகர் விஜய்யிடம் இருந்து விவகாரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து மனு தாக்கல் செய்தார்.

Sangeetha Divorce Case Will TVK Leader Vijay Appear in Person Chengalpattu Court Today

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சங்கீதா மனு தாக்கல் செய்து இருந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 20 (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் விஜய் நேரில் ஆஜராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதனால், விஜய் இந்த வழக்கில் ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தான் சங்கீதா இன்று வழக்கில் நேரில் ஆஜராகவில்லை. விஜய்யும் இன்று நேரில் ஆஜராகவில்லை. வழக்கில் இருவரும் ஆஜராகாத நிலையில் வரும் ஜூன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜூன் 15 ஆம் தேதி விஜய் மற்றும் சங்கீதா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளது.

விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் முற்பகல் 11.30 மணி முதல், வாகன பிரசாரம் மேற்கொள்கிறார். இதனையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

பிரசாரத்தில் விஜய் ஈடுபடுவதால் அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்து இருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக இருப்பதாலும், விஜய் தனது கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாலும், நேரில் ஆஜராக முடியாத சூழல் உள்ளது. எனவே, ஆன்லைன் வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரி விஜய் தரப்பில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்குமா? என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் சங்கீதா நேரில் ஆஜர் ஆகாததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யை பொறுத்தவரை விவகாரத்து வழக்கு அவரது தனிப்பட்ட விவகாரம் என்றாலும் தேர்தல் நேரத்தில் இது அவருக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. விஜய் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை மன ரீதியாக துன்புறுத்தினார் என்றும் மனைவி சங்கீதா தனது விவகாரத்து மனுவில் கோரியிருந்தார். எனினும் முதலில் விஜய் சங்கீதாவுடன் வாழவே விருப்பப்பட்டதாக கூறப்பட்டது.

35 கோடி ரூபாய் செட்டில்மெண்ட்?

ஆனால் தற்போது சங்கீதாவுக்கு விவாகரத்து தர விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. மனம் ஒத்து இருவரும் பிரிவதாக அறிவித்தால் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும் என்பதால் இது தொடர்பாக விஜய் தரப்பும் சங்கீதா தரப்பும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

250 கோடி ரூபாய் வரை தனக்கு செட்டில்மென்டாக தர வேண்டும் என சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த தொகையை தனது மகன் மற்றும் மகளுக்கும் தர வேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. இதில், சங்கீதாவுக்கு 35 கோடி செட்டில்மென்ட் அளிக்க விஜய் முடிவு செய்துள்ளதாகவும், மகன் ஜேசன் மற்றும் மகளை தானே பார்த்துக் கொள்வதாக விஜய் பேசியதாக கூறப்படுகிறது.

விஜய் பிரசாரம் இன்று எப்போது?

விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பஞ்செட்டியில் முற்பகல் 11.30 மணி முதல் ரோடு ஷோ செல்கிறார். இதனையடுத்து, பிற்பகல் 3 மணி முதல் வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதி வழியாக வாகனப் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அனுமதியானது தேர்தல் ஆணையத்திடம் பெறப்பட்டுள்ளது. இந்தப் பிரசார நிகழ்ச்சிக்காக, தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+