கருணாநிதி நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்
சென்னை: பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கலைஞர் நினைவிடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மை பணிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து கடந்த சில நாட்களாகவே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று திடீரென சென்னை அறிவாலயம் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்தினர்.

அப்போது அறிவாலயத்தை முற்றுகையிட முயன்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது ஒரு சிலர் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினர். ஒரு சிலர் வாகனங்களுக்கு அடியில் சென்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் வேறு சில பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் கருணாநிதி நினைவிடம் முன்பாக குவிந்தனர். கைகளில் பதாகைகளை ஏந்தியபடி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் இட்டனர். மேலும் உடனடியாக எங்களுக்கு பதில் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். வரும் புத்தாண்டுக்கு முன்னதாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நினைவிடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது சில தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications