‘முடிந்தால் அப்புறப்படுத்துங்க.. ஒருபோதும் பின் வாங்க மாட்டோம்’ – சென்னை தூய்மைப் பணியாளர்கள் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து, தூய்மைப் பணியாளர்கள் கடந்த 2 வாரங்களாக ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு சென்றது. ஆனால் அரசு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளது. முடிந்தால் எங்களை அப்புறப்படுத்துங்கள். நாங்கள் ஒருபோதும் பின் வாங்க மாட்டோம் என தூய்மைப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணி தனியார் நிறுவனத்திற்கு விடும் முடிவை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசுத் தரப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளுடன் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதுவும் தோல்வியில் முடிந்தது.

sanitation-workers-protest-our-protest-will-continues-says-chennai-sanitation-workers

அரசு போட்ட வழக்கு

இந்நிலையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னை மாநகராட்சி மண்டலம் 5,6 சுகாதாரப் பணிகள் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்து 13வது நாளாக போராடி வருகிறோம். அரசே ஜோடித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அது தலைமை நீதிபதியின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவர்களே குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டுவார்களாம். நீதிமன்றத்தில் வக்காலத்து போடவோ, பதில் சொல்லவே நேரம் கொடுக்கவில்லை.

பெரும்பாலான ஆதி திராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இந்தப் போராட்டம் நடக்கிறது. நாங்கள் இங்கேயே தான் நிற்போம். வேண்டுமென்றால் கைது செய்யுங்கள். ஊடகங்களையும், மக்களையும் நம்பி களத்தால் நிற்கிறோம். பொது மக்கள் யாராவது 40 பக்கங்களுக்கு எழுதி, இங்கு வந்த அனைவரையும் டாப் ஏங்கில் வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சாதாரண மக்களால் இப்படி செய்ய முடியுமா. இது உளவுத்துறை, மாநகராட்சி நிர்வாகம், அரசு சேர்ந்து போட்ட வழக்கு.

பின் வாங்க மாட்டோம்

எங்களை சாலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளனர். ஓடிவிட்டோமா. எங்களை பேச விடவில்லை. நீதிமன்ற தீர்ப்பில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராடலாம் என்று கூறுகிறீர்கள். நாங்கள் வீட்டுக்கு போக மாட்டோம். மீண்டும் இங்குதான் போராடுவோம். 13 நாட்களாக எவ்வளவு அழுத்தம், மிரட்டல்களை கடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். காவல்துறை, மாநகராட்சி முடியாது என்று சொல்கிறார்கள்.

அதையெல்லாம் கடந்து இங்கு நிற்கிறோம். எந்த தலையீடு வந்தாலும் நாங்கள் ஒன்றாக தான் நிற்போம். முடிந்தால் எங்களை கைது செய்யுங்கள். மாணவர்கள், இளைஞர்கள், ஊடகங்கள், மக்கள், அரசியல்கட்சிகள் எங்களை காப்பாற்றுவார்கள். ஒருபோதும் பின்வாங்குவதோ, கலைந்து செல்வதோ நடக்காது. 1,000 போலீஸை அழைத்து வந்து இவர்கள் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறார்கள்.

மேல் முறையீடு

உங்களுக்கு கான்ட்ராக்ட் தான் முக்கியம். தொழிலாளர்கள் நலன் முக்கியம் இல்லையா. காவல்துறையின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம். இங்குள்ள பெண் தொழிலாளர்கள் உயிரிழப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர், அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோர் தான் பொறுப்பு. நாங்கள் அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறோம். 13 நாட்கள் எந்த அசம்பாவிதம் நடைபெறவில்லை.

சமூக நீதி ஆட்சி என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா. அரசுக்கு எதிராக நாங்கள் வேண்டுமென்று போராடவில்லை. முன்பு எங்கள் பணியை விட்டு நீக்கினார்கள். இப்போது மாநகராட்சி போராட்ட களத்தில் இருந்தும் அகற்றுகிறார்கள். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் நாங்களே பணிக்கு சென்றுவிடுவோம். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்.

இடதுசாரியாக இருந்தால்

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கூட தன்னை இடதுசாரி என்று கூறியுள்ளார். இடதுசாரிகள் எப்போதும் தனியார் நிறுவனம் பக்கம் நிற்க மாட்டார்கள். நீங்கள் உண்மையில் இடது சாரியாக இருந்தால் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை பற்றி பேகச முடியாது என அரசு ஆணவ திமிரில் செயல்பட்டால், அதற்கான பதிலை விரைவில் கொடுப்போம்." என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+