கலைஞர் நினைவிடம் அருகே.. திடீரென குவிந்த தூய்மை பணியாளர்கள்! மெரினாவில் பரபரப்பு
சென்னை: மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மெரினா கடற்கரையில் திடீரென போராட்டத்தில் இறங்கினர்.

முதலில் சென்னை மெரினா காமராஜர் சாலையில், உழைப்பாளர் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இதனையடுத்து கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்களின் மற்றொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூண்மை பணியாளர்கள் கைதுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்துள்ளனர்.
போராட்டம் நடக்கும் என்பதை போலீசார் முன்னரே தெரிந்து வைத்திருந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெண் காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, கைது செய்து அழைத்து செல்ல பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், மெரினா சாலையில் எந்த இடத்தில் போராட்டம் நடைபெறும் என்பது உறுதியாக தெரியாததால், போலீசார் திணறினர். மட்டுமல்லாது ஆங்காங்கே சிறு சிறு குழுவாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
5,6 மண்டலத்தில் தூய்மை பணியை அரசு ஏற்று நடத்த வேண்டும். தற்போது தூய்மை பணியை வழங்கும் நிறுவனம் வழங்கும் ஊதியம் குறைந்தபட்சமாக இருக்கிறது என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
துணை மேயர் மகேஷ் குமார் இந்த போராட்டம் குறித்து கூறுகையில், "தூய்மை பணியாளர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் விதம் தவறாக இருக்கிறது. மாநகராட்சி அலுவலகத்தில் எங்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்திருக்கலாம். இதுபோன்ற போராட்டங்களை தவிர்க்க வேண்டும்" என கூறியுள்ளார்.
மதியம் 12.30 மணியளவில் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். தங்கள் கோரிக்கைள் ஏற்கப்படவில்லை எனில், சென்னை முழுவதும் போராட்டம் தொடரும் என்றும், தற்போது கைது செய்த மண்டபத்தில் அடைத்து இரவு விடுவித்தாலும் போராட்டத்தை தொடருவோம் எனவும் தூய்மை பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications