சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி.. சண்டை செய்த ஸ்டாலின்! திமுகவின் ஆதிகால வழக்கம்.. அண்ணாமலை அட்டாக்
சென்னை: சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு 2500 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கி உள்ள நிலையில் தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு 147 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் 2014 முதல் 2025 வரை மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த மத்திய அரசு 11 ஆண்டு கால தட்டத்தில் சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு 2532.59 கோடி ரூபாய், அதாவது ஆண்டுக்கு 230 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக கூறியிருந்தது.

மேலும் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளுக்கு 147.56 கோடி ரூபாய் அதாவது ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கி இருப்பதாக கூறியிருந்தது. மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், சமஸ்கிருதத்துக்கு மட்டும் மிக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை விமர்சித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், "சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!" எனத் கூறியிருந்தார்.
இந்நிலையில், நிதி ஒதுக்கீடு குறித்து பொய்யான பிரச்சாரம் செய்ய தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம்.
திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக்கு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்களே.
தமிழகத்தில் பல முறை ஆட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?
நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்? கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?" என கூறியுள்ளார்.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications