மெர்ரி கிறிஸ்துமஸ்.. சான்டாவின் பரிசுகள்.. இயேசுவின் அருளுடன் கொண்டாடுங்கள்!
சென்னை: உலகெங்கும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜிங்கள் பெல்ஸ் ஜிங்கள் பெல்ஸ் சத்தம் கேட்குதே என்று டிசம்பர் மாதம் வந்தாலே எல்லாக் குழந்தைகளும் ஒருவரைத் தேட ஆரம்பித்து விடுகின்றனர். அவர் சிவப்பு நிறத் தொப்பி அணிந்திருப்பார். குள்ளமான குண்டான உருவம். நீண்ட தாடியும் பெரிய தொப்பையுடன் சிவப்பு நிற உடை அணிந்து வருவார். அவர் கையில் சிவப்பு நிற மூட்டை ஒன்று இருக்கும். அவர் தான் கிறிஸ்துமஸ் விழாவின் முக்கியமான சாண்டா கிளாஸ் ஆவார். இவரை அனைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா என்று அனைவரும் அன்போடு அழைக்கின்றனர்.

இயேசு பெருமான் பிறந்த நாளை கிறிஸ்துமஸாகக் கொண்டாடுகிறோம். ஆனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் எதிர்பார்ப்பது சாண்டா கிளாஸின் பரிசைத் தான். அப்படி அந்த பரிசில் என்ன இருக்கும் எதற்காக அந்தப் பரிசுக் கொடுக்கப்படுகிறது என்று யாரேனும் சிந்தித்ததுண்டா.
நாம் அனைவரும் இறைவனை தினமும் வணங்குகிறோம். அப்படி வணங்கும் போது அவரிடம் நமக்குத் தேவையானதைக் கேட்போம். அவரிடம் அது நிச்சயம் என்றுக் கிடைக்கும் நம்பிக்கையில் பிரார்த்திக்கிறோம். அதை உணர்த்துவதற்காகவே கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்படுகிறது. அது கடவுளின் பரிசாகக் கருதப்படுகிறது. அந்தப் பரிசில் என்ன இருக்கும்.
அந்தப் பரிசில் சாக்லெட்டுகள் இனிப்புகள் உணவுப் பருப்புகள் சிறு சிறு விளையாட்டுப் பொருட்கள் போன்றவை இருக்கும். குழந்தைகள் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தாத்தாவிற்காகக் காத்திருப்பர். கிறிஸ்துமஸ் நாளன்று இயேசுப் பிறந்ததை முன்னிட்டு இனிப்புகள் பழங்கள் சாக்லேட்டுகள் கேக்குகள் செய்துக் கொண்டாடுவர். அதை அக்கம்பக்கத்தினருக்கும் கொடுத்து சந்தோசத்தைப் பரிமாறிக் கொள்வர்.
நம்மிடம் உள்ளதை மற்றவரிடமும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற எ்ண்ணத்தை உருவாக்கவே கிறிஸ்துமஸ் தாத்தா இவ்வுலகிற்கு வந்தார். நிக்கோலஸ் என்பவர் தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமிட்டுப் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
- ஜி. உமா மகேஸ்வரி












Click it and Unblock the Notifications