அதிகாரி... ஆசிரியர்... அரசியல்வாதி... தொழில்முனைவோர்... அடுத்து..? சந்தோஷ் பாபுவின் புதிய அவதாரம்..!
சென்னை: இந்திய குடிமைப் பணியை ராஜினாமா செய்துவிட்டு ஆசிரியராகவும், அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ். இப்போது தொழில்முனைவோராக மாறியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள முக்கிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர் சந்தோஷ் பாபு. மிகவும் நேர்மையான இவர் கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விவகாரம் ஒன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐ.ஏ.எஸ்.-க்கு படிக்கும் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியராக மாறினார்.

சிறிதுகாலம் அந்தப் பணியை செய்த அவர், அடுத்ததாக என்ன நினைத்தாரோ கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கு தலைமை அலுவலக பொதுச்செயலாளர் பதவியை கொடுத்த கமல், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட இன்னும் பல முக்கிய விவகாரங்களில் சந்தோஷ்பாபுவிடம் ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்பட்டார்.
கட்சியில் இணைந்த சில நாட்களில் சந்தோஷ்பாபு கமல்ஹாசனுக்கு நெருக்கமானவராக மாறினார். இதனிடையே நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை வேளச்சேரி தொகுதி வேட்பாளராக சந்தோஷ் பாபுவை நிறுத்தினார் கமல். தொகுதியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பிரச்சாரத்துக்கு செல்வார் என கமல் எதிர்பார்த்திருந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டை தாண்டவில்லை அவர். அப்போதே இவரது நடவடிக்கைகள் குறித்து சலசலப்பு ஏற்பட்டது.
தேர்தல் முடிவுக்கு பிறகு மக்கள் நீதி மய்யத்தில் ஏற்பட்ட பிரளயத்தில் சந்தோஷ்பாபு அங்கிருந்து வெளியேறினார். ஐ.ஏ.எஸ். அதிகாரி, பிறகு ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர், அதைத் தொடர்ந்து அரசியல்வாதி, என்று இருந்த சந்தோஷ்பாபு இப்போது தொழில்முனைவோர் என்ற புதிய அவதாரத்தில் காட்சியளிக்கிறார்.
கேப்ஸ்டோன் ஐ.ஏ.எஸ்.அகாடமி என்ற பெயரில் புதிதாக நிறுவனம் தொடங்கியுள்ள அவர், முழுக்க முழுக்க இணைய வழியிலான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கோச்சிங் வகுப்புகளை தொடங்கவிருக்கிறார். இதற்காக பல லட்சங்கள் ஊதியமாக கொடுத்து ஓய்வு பெற்ற அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளார். எல்லா சரி இவரது நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற கட்டணம் எவ்வளவு தெரியுமா ஒன்றரை லட்சம். இந்த தொகை கூடுதலாக இருப்பதாக அவருக்கு தொடர்ந்து கருத்துக்கள் வந்ததால் 94 ஆயிரமாக பயிற்சிக்கட்டணத்தை குறைத்திருக்கிறார் சந்தோஷ் பாபு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications