ஒன்னு, ரெண்டு சீட்டுன்னா கூட்டணியே வேண்டாம்.. இரட்டை இலையில் போட்டி இல்லை.. சரத்குமார் திட்டவட்டம்
மதுராந்தரம்: அதிமுக கூட்டணியில் ஓரிரு சீட்டு கொடுத்தால் போதாது. அப்படி இருந்தால் கூட்டணியில் சேர மாட்டோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Recommended Video
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக மதுராந்தகம் வருகை தந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தொடர்ந்து தமிழகத்தில் உயர்ந்து வரும் டீசல், பெட்ரோல் விலை உயர்வை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலக வர்த்தகத்தில் டாலர் விலை உயரும் போது பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுகிறது. ஆகவே பெட்ரோலை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும். அப்போது போதுதான் அதுசிறப்பாக இருக்கும்.

முதல்வர்
அதிமுக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் அதிமுக கூட்டணியில்தான் உள்ளன என முதலமைச்சர் கூறியிருக்கிறார்கள். கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளார். பிரேமலதா இதுவரை அதிமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கூறியிருக்கிறார்.

தேமுதிக கருத்து
அது அவருடைய கருத்து மற்றும் அவருடைய வெளிப்பாடு அதை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் நான் கருத்து சொல்வதற்கில்லை. நாங்கள் இதுவரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு என்னவென்று தெரியும்.

கூட்டணி
அப்போதுதான் ஒரு முடிவுக்கு வரமுடியும். கூட்டணியில் எங்களுக்கு ஓரிரு தொகுதி கொடுத்தால் கூட்டணியில் தொடர மாட்டோம் என ஏற்கனவே மண்டல கூட்டத்திற்குப் பிறகு அறிவித்திருக்கிறோம். அதுபோல தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்பதை ஏற்கனவே எங்கள் கட்சி சார்பில் தெரிவித்திருக்கிறோம்.

அதிமுகவுடன் கூட்டணி
சசிகலா அதிமுகவுடன் சேர வாய்ப்பு உள்ளதா என்பதை அது அவர்கள் இருவரும்தான் பேசி முடிவெடுக்க வேண்டும். சசிகலா ஏற்கனவே இயக்கத்தில் இருந்து இருக்கிறார். பிறகு வெளியேறி இருக்கிறார். அவர்கள் இருவரும் சேருவது பற்றி அவர்கள்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் சரத்குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications