சரவணபவன் ராஜகோபால்.. புழல் சிறையில் அடைப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!
Recommended Video
சென்னை: ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தார் ராஜகோபால். இதற்காக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்தார். அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தனது ஹோட்டலில் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியின் மீது ஆசைப்பட்ட சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். கடந்த 2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதையும் எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார். அப்போது ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

மனுதாக்கல்
இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் ராஜகோபாலோ தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் உள்ளதாக கூறி சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கேள்வி
இதனிடையே அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று ராஜகோபால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் ஏன் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாதோ என கேள்வி எழுப்பியது.

ஆம்புலன்ஸ் வாகனம்
மேலும் சரணடைவதிலிருந்து விலக்கு கேட்டு அவர் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் வெளியே வந்தார்.

பரபரப்பு
அப்போது அவரை புகைப்படம் எடுக்க பத்திரிகையாளர்கள் சூழ்ந்தனர். இதையடுத்து அங்கிருந்த காவலாளிகளும் மருத்துவமனை ஊழியர்களும் கேமராவை உடைப்போம் என மிரட்டினர். பின்னர் படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் நீதிமன்றத்துக்கு வந்த ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications