ஏலத்துக்கு வந்தது சரவணா ஸ்டோர்ஸ் சொத்துக்கள்.. இந்தியன் வங்கி நோட்டீஸ்.. பரபர பின்னணி!
சென்னை: சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளதாக சென்னையில் உள்ள இந்தியன் வங்கி நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மார்ச் 17-ம் தேதியான இன்று தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்டது தான் சரவணா ஸ்டோர்ஸ். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற இந்த கடை அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கிளைகளுடன் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக வளர்ந்தது.

சண்முக சுந்தரம் நாடார்
சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், ஆடைகள், ஆபரணங்கள் வாங்குவதற்கு அதிகம் விரும்பும் கடையாக உயர்ந்தது. இந்த கடையை உருவாக்கியவர் சண்முக சுந்தரம் நாடார். நிறுவனங்களின் கிளைகளில் இப்போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள்.

கடைகள் பிரிப்பு
இந்நிலையில் ஆழமரமாக வளர்ந்த சரணவணா ஸ்டோர்ஸை சண்முக சுந்தரம் நாடாரின் மகன்கள் யோகரத்னம், ராஜரத்னம், செல்வரத்னம் என மூன்று பேரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துக்களை பிரித்துக் கொண்டனர்.

பல்லாகு துரை
இந்நிலையில் கடின உழைப்பால் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கும் சரவணா ஸ்டோர்ஸுக்கு இந்தியன் வங்கியின் 'வாராக் கடன் வசூலிப்பு பிரிவிலிருந்து நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டு இருக்கிறது.. சரவணா ஸ்டோர்ஸின் பங்குதாரர் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் லிமிடெட் உரிமையாளர் பல்லாகு துரை பெயருக்கு அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இந்தியன் வங்கி நோட்டீஸ்
இந்தியன் வங்கி அனுப்பிய நோட்டீஸில், உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள 4,800 சதுர அடியில் 124 கோடி ரூபாய் மதிப்புள்ள கடையும், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் (கோல்டு பேலஸ்) கடையும், 288,08,67,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது. மார்ச் 17-ம் தேதி ஏலம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முழு தகவல் இல்லை
சென்னையில் உள்ள, இந்தியன் வங்கியின் வாராக்கடன் வசூலிப்பு பிரிவும் ஏலம் அறிவிப்பு தொடர்பான நோட்டீஸ் உண்மை என்று தெரிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் நேற்று வங்கி வேலைநிறுத்தம் காரணமாக தெரியவரவில்லை. இன்று முழு தகவல்கள் தெரியவரலாம்
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications