சார்பட்டா பரம்பரையின் கடைசி வீரர்.. காசிமேடு "கபிலன்" ஆறுமுகம் காலமானார்
சென்னை: சார்பட்டா பரம்பரையின் கடைசி வாரிசான காசிமேடு கபிலன் பாக்ஸர் ஆறுமுகம் காலமானார். அவருக்கு 72 வயது.
பாக்ஸிங் எனும் குத்துச்சண்டைக்கு பெயர் பெற்ற இடம் வடசென்னை. இங்கு ஆரம்ப காலங்களில் குத்துச்சண்டைதான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. இரு தரப்புகளாக பிரிந்து குத்துச்சண்டை போட்டிகளை நடத்தினர்.

அந்த வகையில் குத்துச்சண்டையில் கோலோச்சி வந்தவர் சார்பட்டா பரம்பரையின் வீரர் ஆறுமுகம் காலமானார். அவருக்கு வயது 72 ஆகிறது. 128 தொழிற்முறை குத்துசண்டை போட்டிகளில் போட்டியிட்டுள்ளார்.
இவர் நாக் அவுட் முறயில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 3 மூன்று மாதங்களாக கல்லீரல் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் உடல்நலக் குறைவால் அவர் காலமானார். அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அது போல் அவருடன் பயணித்த வீரர்கள் அவர்களுடைய பரம்பரையினரும் அஞ்சலி செலுத்தினர். திரை பிரபலமான வில்லன் நடிகர் சாய்தீனா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
1960 களின் பின்னணியில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை , சார்பட்டா பரம்பரை ஆகிய இரு பிரிவினரிடையே நடந்த மோதலை மையமாக சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.
சார்பட்டா என்ற சொல்லுக்கு சால்ட் கொட்டாய் என்ற பகுதியின் பெயரே மருவிவிட்டது. இதற்கு பொருள் 4 பட்டாக் கத்திகள் ஆகும். அதாவது வடசென்னையை சேர்நத குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டதால் இந்த படத்திற்கு பிறகு வடசென்னையில் இருந்த பழைய பாக்ஸர்கள் லைம்லைட்டில் வந்தனர்.
இந்த திரைபடத்தில் குத்துச்சண்டையை திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே ஆதரிப்பது போன்று காட்டப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியது. அதாவது தமிழ்நாடு தொழில்முறை அல்லாத குத்துச்சண்டை வீரர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக எம்ஜிஆர் குத்துச்சண்டையின் அடையாளமான முகமது அலியை சென்னைக்கு அழைத்து வந்தது எல்லாம் இந்த திரைப்படத்தில் காட்டவில்லை என்பதால் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இயக்குநர் பா ரஞ்சித்துக்கு கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications