திடீர் இட்லி போல் திடீர் கட்சி.. சசிகலாவுக்கு 0.1% வாக்கு கூட கிடையாது.. சாடிய டிடிவி தினகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் உருவாகும் புதிய கட்சிகளால் எங்கள் கூட்டணிக்கு பாதிப்பும் இல்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட இல்லை என்று கூறிய டிடிவி தினகரன், காக்கா குருவிகள் போல் நெல்மணிகளை சிலர் கொத்தி செல்வதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விமர்சித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சசிகலா தரப்பில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சசிகலா பேசுகையில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதிய கட்சியை தொடங்குகிறேன். 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது போல் இனி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

AMMK

இதன்பின் புதியக் கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தார். அந்த கொடி கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடிக்கு நடுவே அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து சசிகலாவின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், சசிகலா தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஓபிஎஸ் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் நகர்வு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சசிகலாவின் புதிய கட்சி தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுக - அமமுக கூட்டணி மூலமாக ஜெயலலிதாவின் 99.1 சதவிகித தொண்டர்கள் ஒன்றிணைந்துவிட்டனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். திடீர் சாம்பார், திடீர் இட்லி போல் கட்சிகள் வரலாம். ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்னவர்களின் சாயம் இப்போது வெளுத்துவிட்டது.

கடந்த 35 ஆண்டு காலமாக எனக்கு மட்டுமே தெரிந்த நபர்களின் உண்மை நிலை, இன்று தமிழக மக்களுக்கும் நன்றாக தெரிய வந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் ஆட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது. நெல்மணிகள் நிறைந்த தோட்டத்தில் சிலவற்றை சிட்டுக்குருவிகளும், காக்கைகளும் கொத்தி செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமா என்ன? சசிகலாவுக்கு 0.1% வாக்குகள் கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+