கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம்.. நிச்சயம் வருகிறேன்.. தொண்டரிடம் சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ
சென்னை: கட்சியை சரி செய்து கொள்ளலாம். அனைவரும் கவனமாக இருங்கள் என்று கட்சி தொண்டர் ஒருவரிடம் சசிகலா தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் சசிகலா தான் இதை பேசினாரா என்பது உறுதியாக தெரியவில்லை.
Recommended Video
சொத்துக்குவிப்பு வழக்கில் 2017ம் ஆண்டு முதல் 4 வருடங்கள் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் இறுதியில் தண்டனை காலம் முடிந்து விடுதலையானார்.
சிறையை விட்டு வெளியே வந்த சசிகலா கிட்டத்தட்ட 24 மணி நேரம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஊர்வலம் போல் சென்னை வந்தார். தொண்டர்கள் ஒவ்வொரு ஊரிலும் அவரை வரவேற்றார்கள். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு மெதுவாக காரில் பயணம் செய்து சென்னைக்கு வந்து சேர்ந்தார்.

ஒதுங்கினார்
சசிகலா சென்னை வந்த அன்று எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனால் தீவிர அரசியலில் ஈடுபடுவாரா சசிகலா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் சில நாட்கள் அமைதியாக இருந்த சசிகலா திடீரென அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு ஒரு முறை கூட அரசியல் குறித்து பேசவும் இல்லை. மீடியாக்களை சந்திக்கவும் இல்லை.

மனவருத்தம்
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சியை பறிகொடுத்தது. திமுக ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவின் சட்டசபை தேர்தல் தோல்வி விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இப்போது வரை இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். இருவருக்கும் இடையே மனவருத்தம் இருப்பதாகவும் தகவல்கள் பரவின.

சசிகலா பேச்சு
இந்த சூழலில் அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் தொண்டரிடம் சசிகலா, நல்லா இருக்கீங்களா என்று கேட்பதாக உள்ளது. அதற்கு அவர் நலலாஇருக்கிறேன் அம்மா. உங்கள் குரலை கேட்டதே பெரிய சந்தோஷம் அம்மா என்கிறார். அதற்கு சசிகலா, "ஒன்றும் கவலைப்படாதீங்க கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம்.. கொரோனா முடிந்த பின் நிச்சயம் நான் வருவேன், எல்லாரும் கவனமாக இருங்க" என்பதாக உள்ளது.

அதிமுகவில் என்ன நடக்கும்
அதற்கு அந்த தொண்டர், சரிங்கம்மா, உங்களுக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம்.. எங்கள் பின்னாடி தான் நாங்கள் இருப்போம் என்கிறார். அதற்கு சரிசரி என்று சசிகலா கேட்பதாக ஆடியோ முடிகிறது. இந்த ஆடியோவை பார்த்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் பலர் உற்சாகம் அடைந்துள்ளனர். சசிகலா மீண்டும் அரசியலில் களம் இறங்குவார் என்று புது நம்பிக்கையுடன் உள்ளனர்.












Click it and Unblock the Notifications