அக்கா இல்லாமல் எப்படி என் மகன் கல்யாணத்தை நடத்துவது.. திகைத்து நிற்கும் திவாகரன்
சென்னை: சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு திருமண வயது வந்துவிட்டது. இதனால் அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
டிடிவியின் தம்பி பாஸ்கரன் மகளை ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்து வைக்க உள்ளதாக கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே தகவல் உலா வந்தது. ஆனால் குடும்பச்சண்டை காரணமாக அந்தப்பேச்சு அப்படியே நிற்கிறதாம்.

ஜெய் ஆனந்த் வயதை ஒட்டியுள்ள இளவரசியின் மகன் விவேக்குக்கு திருமணம் முடிந்து குழந்தையே பிறந்துவிட்டது. இதனால் திவாகரனின் மனைவி, தனது மகன் ஜெய் ஆனந்துக்கு திருமணம் செய்துவைக்கலாம் எனக் கூறுகிறாராம்.
ஆனால் அக்கா சிறையில் உள்ள சூழலில் மகனுக்கு திருமணத்தை நடத்த திவாகரனுக்கு விருப்பமில்லையாம். தனக்கும் சசிகலாவுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அக்காவை விட்டுக்கொடுக்க தம்பியால் முடியவில்லையாம். அதனால் சசியுடன் தனக்கு இருக்கும் மனக்கசப்பை போக்கிய பின் திருமண ஏற்பாடுகளை தொடங்கலாம் என திவாகரன் எண்ணுகிறாராம்.
சசிகலா கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு சிறை வாழ்க்கையை நிறைவு செய்துள்ள நிலையில், இன்னும் அவர் வெளியே வர ஒன்றரை ஆண்டுகாலம் இருக்கிறது. இப்படி பல கோணங்களில் திவாகரன் யோசித்துவருகிறாராம்.
ஒருவேளை இப்போது மகனுக்கு திருமணத்தை வைத்தால் தன் மீதுள்ள கோபத்தில் அக்கா பரோலில் கூட வரவில்லை என்றால் என்ன செய்வது என்று திவாகரன் நினைக்கிறாராம். அத்தை கலந்து கொள்ளாமல் திருமணத்தை நடத்த ஜெய் ஆனந்துக்கும் விருப்பமில்லாததால், திவாகரன் அமைதி காத்து வருகிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications