Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் வெளிநாடு போகும்போது அமைச்சரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்க வேண்டும்.. சொல்றது யாருனு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது மூத்த அமைச்சர் ஒருவரிடம் காவல்துறையை ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அதைக்கூட செய்யாமல் வெளிநாடு சென்றுவிட்டார் ஸ்டாலின் என விமர்சித்துள்ளார் சசிகலா.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான இன்று, அவரது நினைவிடத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மரியாதை செலுத்தினர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா ஆகியோரும் அடுத்தடுத்து அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்திருந்தனர்.

Sasikala criticizes CM Stalin for his spain visit without hand over police portfolio with senior minister

அப்போது, சசிகலா கார் எதிரே வருவதைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வம், உடனே சென்று சசிகலாவிடம் பேசினார். அப்போது காரில் இருந்து இறங்கிய சசிகலாவும் ஓபிஎஸ்ஸிடம் பேசினார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சசிகலாவும், ஓ.பன்னீர்செலவமும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளது அரசியல் அரங்கில் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவிடம், விஜய் அரசியல் கட்சி தொடங்கியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "ஜனநாயகத்தில் யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் கட்சி தொடங்கியதை வரவேற்கிறோம்." என்றார்.

மேலும் பேசிய சசிகலா, "ஜெயலலிதா குறித்து திமுகவினர் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சராக ஆ.ராசா இருந்திருக்கிறார். ஆ.ராசாவின் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். பொதுமக்கள் பிரச்சனைகளை ஊடகங்கள் பேச வேண்டும். நான் தான் பயப்படாமல் பொதுமக்கள் பிரச்சனையை துணிந்து பேசுகிறேன். மடியில் கனம் இல்லை என்பதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

டிஎன்பிஎஸ்சி 50,000 இளநிலை உதவியாளர் பதவி காலியாக உள்ளது. அதில், 2,000 இடங்களைத் தான் நிரப்புகிறது திமுக அரசு. திமுக அரசால் இதையே முழுமையாகச் செய்ய முடியவில்லை. இவர்கள் தான் வெளிநாட்டுக்குப் போய் முதலீட்டை ஈர்க்கிறார்களா?

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும்போது மூத்த அமைச்சர் ஒருவரிடம் காவல்துறையை ஒப்படைத்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். அதைக் கூட செய்யாமல் வெளிநாடு சென்றுவிட்டார் ஸ்டாலின். ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் என்ன செய்வது? ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது தன்னுடைய துறையை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்து கவனிக்கச் சொன்னார்." என்றார்.

மேலும் பேசிய சசிகலா, "எங்கள் கட்சிக்காரர் ஓபிஎஸ்ஸை வருகிற வழியில் பார்த்து பேசினேன். எங்கள் குடும்பத்தில் ஒருவர் அவர். திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்திருந்தால் அந்த எம்எல்ஏவின் பதவி பறிபோய் இருக்கும். வரும் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+