சசிகலா அலை.. "புற்றிலிருந்து கிளம்பிய ஈசல்கள்".. கஷ்டமேப்படாமல் தொக்காக கிடைக்க போகிறதா அதிமுக?..
சென்னை: அதிமுகவை மீட்க சசிகலா கஷ்டப்பட வேண்டியதே இல்லை, தானாக வந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவை எப்படியாவது கையில் எடுத்துக் கொள்ள சசிகலா நினைத்தார். ஆனால் அவர் முன்னெடுப்பதற்கு முன்பே கட்சியினர் அவரை அதிமுகவின் பொதுச் செயலாளராக்கி அந்த சான்றிதழை போயஸ் தோட்டத்தில் வைத்து அவரிடம் கண்ணீர் வெதும்ப கொடுத்தனர்.
இதையடுத்து முதல்வர் பதவிக்கு வர ஆசைப்பட்டு கடைசியில் சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டார். 4 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்துக் கொண்டு சென்னை வந்த அவர், எப்படி அதிமுகவை கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிமுக தொண்டர்கள்
ஆனால் அவர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடவில்லை. மாறாக அதிமுக தொண்டர்கள் சிலருடனும் அமமுக தொண்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவர்கள் பேசிய ஆடியோ லீக்கானது. அதிமுக தலைமையோ இதை மறுத்துவந்தது. அமமுகவினருடன் மட்டுமே சசிகலா பேசி வருகிறார் என்றும் அதிமுகவினர் யாரும் அவருடன் பேசவில்லை என்றும் கூறினர்.

எம்ஜிஆர் பிறந்தநாள்
இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்தநாளின் போது எம்ஜிஆர் இல்லத்திற்கு சென்ற அவர் நீர் அடித்து நீர் விலகாது என கூறி அதிமுகவினர் எந்த தவறு செய்தாலும் தான் மன்னிக்க தயாராக இருப்பதை பழமொழி மூலம் உணர்த்தினார். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு ஓபிஎஸ் தயாராக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் முட்டுக்கட்டை போடுவதாகவும் கூறப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழா
இதை உறுதிப்படுத்தும் வகையில் தேவர் ஜெயந்தி விழாவில் பேசிய ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பல நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் சசிகலா, நேரடியாக போய் ஓபிஎஸ்ஸை சந்திக்கவே இல்லை. கட்சியில் சேர்த்துக் கொள்வது குறித்தும் பேசவில்லை.

ஓபிஎஸ் பச்சைக் கொடி
ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டியும் சசிகலா ஏன் அவரை சந்திக்கவில்லை என்பது குறித்தும் அதிமுகவுக்கு உரிமை கோரும் நடவடிக்கைகளில் ஈடுபடாதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவும் ஒரே சமூகத்தினர். இதனால் சசிகலாவுக்கு ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிப்பார்.

சசிகலா
ஆனால் சசிகலா எதிர்பார்ப்பது எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பைத்தான். அவர்களாக பட்டு புரிந்து கொண்டு தன்னை வந்து அழைப்பார்கள் என சசிகலா காத்திருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் கூறியதற்கு ஏற்ப, சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் தன்னை சந்திப்பார்கள் என கருதினார், ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்கு பிறகாவது கட்சியை தன்னிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தற்போது நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலிலும் அதிமுக சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. தமிழகத்தில் ஓட்டே வாங்காது என கூறப்பட்ட பாஜகவும் தற்போது கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த அதிமுக இப்படி தோல்வி அடைந்ததை தொண்டர்கள் நினைத்து நினைத்து வேதனை அடைந்துள்ளார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி
இதையடுத்து சிலர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து சசிகலாவை கட்சியில் இணைத்து புதிய பதவியை கொடுக்க வேண்டும் என புற்றீசல் போல் கிளம்பி கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுக கட்சி பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

நெருக்கடி
தொடர்ந்து தொண்டர்கள் நெருக்கடி கொடுத்தால் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் வேறு வழியின்றி சசிகலாவை சந்தித்து பேச வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இது மட்டும் நடந்துவிட்டால் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தில் ஜெயித்ததை போல் உணருவார் சசிகலா. அதிமுகவை மீட்க எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக பொறுமை காத்திருந்த சசிகலாவுக்கு பழம் நழுவி பாலில் விழுந்து அது தானாக வாய்க்கு விழுவது போன்ற உணர்வை தரும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications