சசிகலா பேச்ச கவனிச்சீங்களா.. அப்போ கன்ஃபார்ம்! டெல்லி பக்கம் வீசும் மன்னார்குடி காத்து..
சென்னை: பாஜக உதவியுடன் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை கைப்பற்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில் நேற்று சசிகலா அளித்த பேட்டி இதை உறுதிபடுத்தி இருக்கிறது.
Recommended Video
ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ளது.
கட்சியிலிருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டபோதிலும், ஓ.பன்னீர்செல்வம் மனம் தளராமல் வழக்குகள், அரசியல் நகர்வுகளை எடுத்து வருகிறார்.

ஓபிஎஸ் நம்பிக்கை
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் பொதுக்குழு வழக்கை ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருக்கிறார். அதேபோல். ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமானதில் இருந்தே டெல்லியையும் மன்னார்குடியையும் மலைபோல் நம்பி தனது ஆதரவாளர்களுக்கு ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

டிடிவி தினகரன்
இந்த நிலையில்தான் தனியார் ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "திமுகவை வீழ்த்துவதற்காக யாரோடும் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். அது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் சரி. டெல்லியிலிருந்து சில நல விரும்பிகள் சசிகலா, இபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எங்களிடம் பேசினார்கள்.

எடப்பாடி வேண்டாம்
நான் எடப்பாடி பழனிசாமியை சேர்த்துக்கொள்ள மாட்டேன். என்ற நிபந்தனையை முன்வைத்தேன். ஓ.பன்னீர்செல்வத்துடன் நாங்கள் இணைய வாய்ப்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன் இணைய மாட்டேன். நடராசன் மரணமடைந்தபோது பரோலில் வந்த சசிகலாவுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்." என்றார்.

சசிகலா பேட்டி
டிடிவி தினகரன் பேச்சு இவ்வாறு இருக்க சசிகலாவின் திட்டமும் இதுதான் என்பது அவரது பேச்சின் மூலமாக அறிய முடிகிறது. சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, "40 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். அதிமுக ஒன்றாகவிடாமல் சிலர் தடுக்கிறார்கள். அதிமுக பிரிந்தால் லாபம் திமுகவுக்கே. எனவே இதன் பின்னணியில் திமுகதான் இருக்கிறது. இதற்கு டெல்லி காரணம் இல்லை." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications