வருகிறார் சசிகலா.. மாவட்டந்தோறும் தடபுடல் வரவேற்பு.. ஆட்டம் பாட்டத்துடன் காத்திருக்கும் அமமுக!
சென்னை: சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையான சசிகலா இன்று சென்னைக்கு வருகை தர உள்ளார்.
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் நுழைவு பகுதியிலும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
சசிகலா வரும் வழியெங்கும் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம்-பாட்டத்துடன் வரலாறு காணாத வரவேற்பு கொடுத்து சென்னைக்கு அழைத்து வர அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக உள்ளனர்.

சசிகலா விடுதலை
சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார். விடுதலை நெருங்கிய நேரத்தில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டதால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழகம் வருகிறார்
பின்னர் தீவிர சிகிச்சையால் குணமடைந்த அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்பு சசிகலா மருத்துவர்களின் அறிவுரைப்படி பெங்களூரு அருகே உள்ள பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தமிழகத்தில் காலடி எடுத்து வைக்க உள்ளார்.

பிரமாண்ட வரேவேற்பு
சசிகலா பெங்களுருவில் இருந்து கார் மூலம் சென்னை வருகிறார். சசிகலா பெங்களூரு-சென்னை ரெயில் வழித்தடம் வழியாக சென்னைக்கு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் நுழைவு பகுதியிலும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க அமமுகவினர் முடிவு செய்துள்ளனர்.

பட்டாசுகள், போஸ்டர்கள்
சசிகலா வரும் வழியெங்கும் பட்டாசுகள் வெடித்தும், ஆட்டம்-பாட்டத்துடன் வரலாறு காணாத வரவேற்பு கொடுத்து சென்னைக்கு அழைத்து வர அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராக உள்ளனர். சசிகலா வழியெங்கும் வரவேற்பு தோரணங்கள், போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தின் எல்லையில் இருந்து சென்னை வரை ஒவ்வொரு இடத்திலும் ஆரத்தி எடுத்து தடபுடல் வரவேற்பு அளிக்க இப்போது இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர் அமமுக தொண்டர்கள்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications