சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இன்னிங்ஸ் 2".. டமாரென வெடிக்க போகும் "புது" பூகம்பம்.. தியானத்திற்கு ரெடியாகிறாராம்.. பரபரப்பு

சசிகலாவின் பிறந்த நாள் அன்று சசிகலா அதிரடியை கிளப்ப போகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா ஒரு சத்தமும் இல்லாமல் இருக்கிறார் என்ற தகவல்கள் ஒரு பக்கம் கசிந்து கொண்டிருந்தால், அவர் பாட்டுக்கு அடுத்த அதிரடிகளில் இறங்கி கொண்டிருக்கிறார் என்ற விறுவிறு செய்திகள் வெளிவர துவங்கி விட்டன.. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசியலில் புயல் வீசப்போகிறது என்ற போனஸ் தகவலும் வட்டமடிக்கிறது.

விரைவில் தேர்தல் உள்ளது.. இதில் திமுக தலைவரும், முதல்வரும் தனித்தனியாக பிரச்சாரங்களை ஆரம்பித்துவிட்டனர்.. எனினும் சசிகலாவின் வருகை எத்தகைய தாக்கத்தை தரப்போகிறது என்பது குறித்தும், ஆளும் தரப்பு குறித்தும் அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது.

அதிமுக தலைமையானது, தேர்தல் பணியில் வேகமெடுத்து வருகிறது.. விருப்ப மனு தாக்கல், உத்தேச பட்டியல் என அடுத்தடுத்த வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது.. இத்தனைக்கும் கூட்டணியே முடிவு செய்யாமல், உறுதியும் செய்யாமல், இந்த பணிகளை அதிமுக கையில் எடுத்துள்ளது.. திமுகவும் இப்படி ஒரு முடிவை உடனே எடுக்கவில்லை.

 அமைதி

அமைதி

அதிமுகவின் இந்த அதிரடிக்கு ஒரு காரணம் இருக்கு.. சசிகலா அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ வேலை நடப்பது போல அதிமுக தலைமைக்கு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.. அதனால், சசிகலாவுக்கு முந்திகொண்டுதான் இதுபோன்ற நடவடிக்கைகளை எடப்பாடியார் கையில் எடுத்தாராம்.. இப்படி வேட்பாளர் லிஸ்ட்டையும் வெளியிட போகிறார்கள்.. இதற்கு காரணம், சசிகலா பக்கம் யாரும் சாய்ந்து விடக்கூடாது என்பதாலும், தன் தரப்பு நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதாலும் இப்படி ஒரு முடிவை எடப்பாடியார் தரப்பு எடுத்துள்ளதாக தெரிகிறது.

 கலக்கம்

கலக்கம்

அதேபோல, சசிகலா தரப்பை எடுத்து கொண்டால், இவ்வளவு காலமாக விசாரிக்கப்படாமல் இருந்த பொதுச்செயலாளர் ரத்து குறித்து உடனடியாக விசாரிக்கக் கோரி வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.. இதுதான் அதிமுக தலைமையை லேசாக அசைத்தும், கலக்கத்தை தந்தும் வருகிறது.

 அதிமுக

அதிமுக

அதுமட்டுமல்ல, எப்படி வருகிற 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அதிமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதுபோலவேதான் சசிகலாவும் அன்றைய நாளை எதிர்நோக்கி உள்ளார்.. ஆன்றைய தினம் சசிகலாவிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.. எப்படியும் அன்றைய தினம் ஜெயலலிதா சமாதியை மூட முடியாது.. திறந்துதான் வைத்திருக்க வேண்டும்..

 அரசு

அரசு

தமிழக அரசு அங்கு மரியாதை செலுத்த வேண்டி இருக்கும்.. எனவே, அன்று, ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்த போகிறாராம்.. அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானமும் செய்ய போகிறாராம்.. இதன்மூலம் மொத்த தமிழகத்தையும் தன் பக்கம் ஒரே நாளில், அதுவும் கொஞ்ச நேரத்தில் இழுத்துவிடலாம் என்று கணக்கு போடுகிறாராம்.

சீட்

சீட்

அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும்.. அதாவது காபந்து அரசு வந்துவிடும்.. எனவே, எந்தவித அரசியல் நிகழ்வுகளையும் ஆளும் தரப்பால் கட்டுப்படுத்த முடியாது.. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த யோசித்து வருகிறார் போலும்.. எல்லாவற்றிற்கும் மேலாக, எப்படியும் இந்த முறை நிறைய பேர் அதிமுகவில் சீட் கேட்டு வருகிறார்கள்.

 சசிகலா

சசிகலா

இதில் சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியாளர்கள், சசிகலா பக்கம் தாவ காத்திருப்போர் என பலரும் அதற்கு பிறகு துணிந்து வெளியே ஒவ்வொருவராக சசிகலா பக்கம் வர வாய்ப்புள்ளது.. அப்போதுதான் பிரச்சனை பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது.. எனவே இதனை அதிமுக இரட்டை தலைமை சமாளிப்பார்களா? அல்லது கட்சிகைளை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்வார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றனர்.

English summary
Sasikala mega plan on 24th Januray Jayalalithas Birthday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X