எப்படி பேசணும்னு எம்.ஜி.ஆருக்கு சொல்லிக் கொடுத்திருக்கேன்.. அடித்து விட்ட சசிகலா- ஆடிப் போன தலைகள்!
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு தாம் ஆலோசனைகளை கூறியிருப்பதாகவும் எம்.ஜி.ஆர் என்னிடம் கட்சி தொடர்பான கருத்துகளை கேட்டதும் வெளி உலகத்துக்கு தெரியாதது என்றும் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் சசிகலா பேசும் ஆடியோ அதிமுக தலைவர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் ஆடியோ அரசியல்தான் இப்போது ஹாட் டாபிக். சசிகலா இன்று யாருடன் பேசுவார்? யாரை பற்றி எல்லாம் பேசுவார்? என்பது நாள்தோறும் வெளியிடப்படும் வானிலை அறிக்கை போலாகிவிட்டது.

சசிகலாவின் ஆடியோ அரசியல்
சசிகலாவின் இந்த ஆடியோ வெளியாவது, அவருடன் உரையாடிய நபர் கட்சியை விட்டு நீக்கப்படுவதும் அதிமுகவில் தொடருகிறது. அதேபோல் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என எடப்பாடி பழனிசாமி முதலான அதிமுக தலைவர்கள் லாவணி பாடுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சசிகலா ஆடியோவால் கொந்தளிப்பு
இந்த நிலையில்தான் தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா தொலைபேசியில் பேசிய ஆடியோ இப்போது வெளியாகி உள்ளது. இந்த ஆடியோவில் சசிகலா பேசியிருக்கும் கருத்துகள் மிக கடுமையான அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் அதிமுக தொண்டர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை
அதாவது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நான் ஆலோசனைகள் கூறி இருக்கிறேன்; அதிமுக தொடர்பாக என்னிடம் எம்.ஜி.ஆர். கருத்துகளை கேட்பார். நான் சொல்லும் கருத்துகளை எம்.ஜி.ஆர். பொறுமையாக கேட்பார். நான் இளம் வயதிலேயே அரசியல் முதிர்ச்சியுடன் செயல்பட்டேன். அதனால்தான் என்னுடைய ஆலோசனையை எம்.ஜிஆர். கேட்டார்.

எப்படி பேசுவது என எம்ஜிஆருக்கே அட்வைஸ்
எம்.ஜி.ஆர் பேசும்போது எப்படி எல்லாம் பேசினால் நன்றாக இருக்கும் என அறிவுரை வழங்கி இருக்கிறேன். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக ஜா. அணி, ஜெ. அணி என பிளவுபட்டது. அப்போது இரு அணிகளையும் ஒன்றாக இணைத்ததும் நான்தான்.. என சசிகலா அந்த உரையாடலில் கூறியுள்ளார்.

ஆடிப்போன அதிமுக தலைகள்
சசிகலாவின் இந்த உரையாடல் இப்போது பெரும் பரபரப்பை கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வீடியோ கேசட் கொடுக்க போயஸ் கார்டனுக்குள் நுழைந்தவர்தான் சசிகலா என்பது நாடறியும். சசிகலாவை ஜெயலலிதா எந்த இடத்தில் வைத்திருந்தார் என்பதையும் இந்த உலகமே அறியும். ஆனால் இப்போது எம்.ஜி.ஆருகே நானே அட்வைசர்; ஆலோசகர் என கூறியிருப்பதுதான் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில் -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்!












Click it and Unblock the Notifications