பிப் 8-இல் தமிழகம் அதிரும்ல எடுத்த சபதம் முடிப்பேன்.. முதல்வர், துணை முதல்வர் வீடு அருகே போஸ்டர்கள்!
சென்னை: முதல்வர், துணை முதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலையானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற அவர் தற்போது தொற்று நீங்கினாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
சசிகலா விடுதலையான நாளான 27-ஆம் தேதி முதல் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. அதை ஒட்டும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

சசிகலா
அவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இருந்தபோதிலும் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர், துணை முதல்வர் குடியிருப்பு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ராஜமாதாவே வருக
அதில் உம் சொல்லே இங்கு சாசனம், எங்கள் ராஜமாதாவே வருக வருக என்றும் பிப்ரவரி 7-இல் தமிழகம் அதிரும்ல!, எடுத்த சபதம் முடிப்பேன்... இரட்டை இலையும் நமதே, நாளையும் நமதே என மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

செங்கோல்
அந்த போஸ்டர்களில் செங்கோலை ஜெயலலிதா சசிகலாவுக்கு கொடுப்பது போன்ற படங்கள் இருந்தன. அது போல் ஜெயலலிதா சமாதியில் சசிகலா ஓங்கி அடித்து சபதம் செய்வது போன்ற படமும் சசிகலா மைக்கில் பேசுவது போன்ற படமும் இருந்தன.

அதிமுக கொடி
நாளை மறுநாள் சென்னைக்கு வரும் போது பல்வேறு இடங்களில் அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அவரது காரில் பெங்களூரில் அதிமுக கொடி கட்டியிருந்தது போல் சென்னைக்கு வரும் போது அதிமுக கொடி கட்டியிருக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications