ஃபுல் போதை.. பெண் போலீஸை தாக்கியதாக புகார்.. பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன் கைது
சென்னை: முன்னாள் எம்பி பாஜக நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் பிரதீப் ராஜா பெண் போலீஸாரை தாக்கியதாக விருகம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா. இவரை சுற்றி சர்ச்சைகள் எப்போதுமே சூழ்ந்திருக்கும். இவர் அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் வில் புக்கில் இடம்பெற்றிருந்தார். ஆனால் இவர் ஒரு முறை விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவுடன் மோதல் போக்கில் ஈடுபட்டதாக அவரை கட்சியிலிருந்து ஜெயலலிதா அவர் எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து பரபரப்பை கிளப்பினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் அணியுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்தநிலையில்தான் கடந்த 2018ஆம் ஆண்டு இவர் கணவர் லிங்கேஸ்வர திலகனை விவாகரத்து செய்துவிட்டு டெல்லியில் ராமசாமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அதிலும் ராமசாமி ஏற்கெனவே திருமணமானவர் என்பதால் அவருடைய மனைவி சத்யபிரியா இந்த திருமணத்தை எதிர்த்தார். ஆனாலும் எதிர்ப்பைகளை எல்லாம் மீறி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு பாஜகவில் சசிகலா புஷ்பா இணைந்தார். அங்கு அவருக்கு மாநில துணை தலைவர் என்ற முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. பரமக்குடியில் நடந்த அந்த விழாவில் சசிகலா புஷ்பா கலந்து கொண்டார். அங்கு பாஜகவின் நிர்வாகி பொன் பாலகணபதி என்பவர் சசிகலா புஷ்பாவிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது வீடியோவாக வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாலர் பொன் பால கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும் போது ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சியில் ஒன்றையும் கிழிக்கவில்லை.
சுய புராணம் பாடத் தகுதி உள்ளவர்தான் அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அண்ணாமலைக்குத்தான் மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது என பேசிக் கொண்டிருக்க மறுபுறம் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில் பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மேடை ஏறும் போதுதான் அவரது கட்சி நிர்வாகிகள் மேடை ஏறுகிறார்கள் என கிண்டலாக தெரிவித்திருந்தார்.
இதற்கு சசிகலா புஷ்பா பதிலடி கொடுக்கும் வகையில் பேசுகையில் நீங்கள் வீட்டிலிருந்து வெளியே வரும் போது கால் இருக்காது. நாக்கு இருக்காது, தூத்துக்குடியில் மாற்றம் வர போகிறது. கீதா ஜீவன் அமைச்சராக இருக்கும் போது தூத்துக்குடியில் திமுக தோற்க போகிறது. பாஜக வெல்ல போகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து இந்த கூட்டத்தில் சசிகலா புஷ்பா பேசி முடித்த அடுத்த நாள் அவருடைய வீடும், கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதையடுத்து கீதா ஜீவன் வீட்டை முற்றுகையிடவும் பாஜகவினர் முயன்றனர்.
இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் அவருடைய மகன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய மகன் பிரதீப் ராஜா. இவர் நேற்று விருகம்பாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பெண் போலீஸ் ஒருவர் நிறுத்தி சோதனையிட்டார். பின்னர் மது போதையில் இருந்ததை அடுத்து அவரை காலையில் விருகம்பாக்கம் காவல் நிலையம் வருமாறு கூறினார். அதற்கு ஆத்திரமடைந்த பிரதீப் ராஜா அந்த பெண் போலீஸை தாக்கினார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!












Click it and Unblock the Notifications