சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலா கவலை அவங்களுக்குதான்.. "தளபதி"தான் அடுத்த முதல்வர்.. தீயா வேலை பார்க்கும் உடன் பிறப்புகள்!

ஸ்டாலினை முதல்வராக்காமல் விடமாட்டோம் என்று திமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா வருகையை அதிமுக - அமமுக - பாஜக என கட்சிகள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.. ஆனால், "சசிகலா வெளியே வந்தால் என்ன, வராவிட்டால் என்ன.. எங்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு, இந்த முறை எங்கள் தளபதியை ஆட்சியில் உட்கார வைக்காமல் போக மாட்டோம் என்று திமுக தரப்பினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

சசிகலா விடுதலையை பற்றின பேச்சு தற்போது அதிகமாக எழுந்து வருகிறது.. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை முறியடிக்க இப்போதைய அதிமுகவோடு அமமுகவையும் இணைத்தால்தான் சாத்தியம் என்று பாஜக கருதுகிறது.

 Sasikala release and AIADMK, DMK politics

அதனால்தான், சசிகலா விடுதலையில் அப்போதிருந்தே ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் கசிந்தன. அதற்கேற்றார்போல, சுப்பிரமணியசாமி இவரை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்டது.. எங்கு பேட்டி தந்தாலும், சசிகலாவின் பெருமையை சு.சாமி சொல்லி கொண்டே இருப்பதும் அதற்கு உதாரணம்.

சசிகலா வக்கீல் தரப்பு, கொரோனா காலத்திலும், சசிகலாவை வெளியில் கொண்டு வருவதற்கான எல்லா வேலைகளிலும் இறங்கி உள்ளனர்.. அநேகமாக அடுத்த மாசமே விடுதலையாக வாய்ப்பு உள்ளதாம்!! ஆனால், அதற்கு முன்பாகவே சசிகலாவுக்கான புகழாரங்கள் கட்சிகள் தரப்பில் சூட்டப்பட்டு வருகின்றன.. வாழ்த்து போஸ்டர்களும் பரபரத்தன.

ஒன்னு வழிக்கு கொண்டு வரணும்.. இல்லாவிட்டால் டேமேஜ் செய்யணும்.. என்ன பிளான்.. திமுகவை கதறவிடும் பாஜக?ஒன்னு வழிக்கு கொண்டு வரணும்.. இல்லாவிட்டால் டேமேஜ் செய்யணும்.. என்ன பிளான்.. திமுகவை கதறவிடும் பாஜக?

இதில், அமமுகவைவிட ஏக குஷியில் இருப்பது அதிமுக தலைகள்தானாம்.. இன்னமும்கூட சசிகலா என்று சொல்லாமல் சின்னம்மா என்று சொல்லும் விசுவாசிகள் அதிமுகவில் உள்ளனர்.. முக்கிய துறையில் உள்ள ஒரு அமைச்சருக்கு 25 எம்எல்ஏக்கள் சப்போர்ட் உள்ளது என்றால், அதற்கு பின்னணியில் சசிகலா இருப்பதால்தான்.. ஊழல் வழக்கு, சிபிஐ ஆஜர் என்று சென்ற ஒரு அமைச்சர், இப்போது வரை பதவியில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்கும் பின்னணியில் சசிகலா இருப்பதால்தான்!!

"எப்பவுமே அதிமுகவுக்கு எஜமானி சசிகலாதான்.. எடப்பாடியாருக்கு பதிலா ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்தி முதல்வர் ஆக்கியிருந்தா, இந்நேரம் எங்க நிலைமையே வேற.. தாராளமா கட்சியில் பணப்புழக்கம் இருந்திருக்கும்.. அந்தம்மா வந்தால்தான் எல்லாம் சரியாகும்" என்று அதிமுக தரப்பின் முக்கிய புள்ளிகள் சிலர் கூறுகிறார்கள்.

இதில் ஆச்சரியம் என்வென்றால், திமுகவில் சிலரும் சின்னம்மாவின் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனராம்.. ஆனால், அவர்கள் எல்லாம் அதிருப்தியில் உள்ளவர்கள் என்று தெரிகிறது... ஒருசிலர்தான் இப்படி உள்ளனர தவிர, மொத்த திமுகவும், களப்பணியில் இறங்கிவிட்டனர்.

"அந்தம்மா வந்தா என்ன, வராட்டி என்ன? எங்களுக்கு அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை.. நிறைய வேலை இருக்கு.. தளபதியை முதல்வர் ஆக்கி பார்க்காமல் விட மாட்டோம்.. கடுமையாக உழைக்க போகிறோம்.. அந்தம்மா வெளியே வந்தால், அது எடப்பாடி, ஓபிஎஸ் பிரச்சனை.. அந்த விஷயத்தை தூக்கி பிடிக்கணும்னு எங்களுக்கு அவசியம் இல்லை" என்கிறார்கள்!

English summary
Sasikala release and AIADMK, DMK politics
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X